My Tweets @bloggerzbible

13 May, 2014

புபனேஸ்வரும் குறிக்கோளும்: பகுதி 1

| | with 2 comments |

காலம்: 2002 இறுதி காலாண்டு.

இடம்: புபனேஸ்வர். பல மாநிலங்களிலிருந்து ஒரு Tier-1 IT company-ல் தேர்ச்சி பெற்ற சுமார் 70-க்கும் மேற்ப்பட்ட trainees கனவுகளுடன் வந்திறங்கிய இடம். இவர்களின் ஒரே குறிக்கோள்: industry-ல் one of the toughest training என கருதப்படும் இந்த கடைசிக் கட்டத்தை எப்படியாவது தாண்ட வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்கள்: இந்த trainee batch-ல் இருந்து உருவான ஒரு (clique) தன்னல உட்குழு. என்னையும் சேர்த்து ஆறு பேர் கொண்டது இந்த குழு. தன்னல உட்குழு என்றாலே ஏதாவது ஒரு common thread இருக்கணுமில்லையா? அது தான் சினிமா. இந்த சேர்க்கையினால் குறிக்கோள் என்ன ஆனது என்பது தான் இரண்டு பகுதிகள் கொண்ட இந்த பதிவின் நோக்கம்.

ஹும்...அடுத்து என்ன செய்வது? 

தினமும் training முடிந்து வீடு வந்தால் ஒவ்வொருவரின் முகத்தில் தெரியும் பெரிய கேள்வி இதுவாகத் தானிருக்கும். TV கிடையாது, mobile phone கிடையாது, laptop கிடையாது. (இதில் ஒன்று இருந்திருந்தாலும் இந்த பதிவு எழுதப்படாமலேயே போயிருக்கும்). இந்நிலையில் எங்களுக்கு ஆறுதல் விடை ஒன்று கிடைத்தது.
Audio cd player!  அந்த ஊரில் முதன் முதல் சினிமா உலகினுடன் தொடர்பு என்று பார்த்தால் ஒரு சிறிய audio cd player தான். தெய்வாதீனமாக ஒருவன் எடுத்து வந்திருந்தான். அதை on செய்து விட்டு,  'பொங்கல்' ஆரம்பித்தால் late night வரை போகும். அதில் பெரும்பாலும் சினிமா தான் பிரதானம். மெல்ல சினிமா மீது அனைவருக்கும் உள்ள பிடிப்பு மிக தெளிவானது. சில நாட்களிலேயே player தேய்ந்து கதறி அழுகிறவரை கேட்டு முடித்திருப்போம்.

ஹும்...அடுத்து என்ன செய்வது?

Cinema theatre! தமிழ் நாட்டில் (சென்னை தவிர) கஷ்டப்பட்டு தேடினால் அத்தி பூத்தார் போல ஒரு தியேட்டரில் தமிழ் அல்லாத மொழி திரைப்படத்தை காண முடியும். ஆனால் புபனேஸ்வர்-ல் நிலைமை அப்படியே தலைகீழ். பெரும்பாலும் ஹிந்தி தான், ரொம்ப தேடினால்தான் ஒரியா மொழிப் படத்தை காண முடியும். தேசிய மொழியின் அருமை அப்பொழுது தான் எங்களுக்கு புரிந்தது. வாழ்க Bollywood! பிரதி வெள்ளிக்கிழமை, தியேட்டர் வழியாக செல்லும் ஆபீஸ் பஸ்-ல் ஏறிக் கொண்டு நேராக தியேட்டர் சென்று விடுவோம். என்ன திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது முக்கியமல்ல. Tick mark போட்டு விடுவோம். 2-3 வாரங்களில், இந்த routine-உம் எங்களின் சினிமா பொழுது போக்கிற்கான எதிர்ப்பார்ப்பில் ஏதோ குறை உள்ள உணர்வை ஏற்ப்படுத்தியது.

Bhubaneswar at Night by Sabyasachi Baldev/ CC BY-SA 2.0


ஹும்...அடுத்து என்ன செய்வது?

மறுபடியும் cinema theatre! அதென்ன 'மறுபடியும்' என்று யோசிக்கிறிர்களா? அது வேறொன்றும் இல்லை - பார்த்த படமாக இருந்தாலும் வெள்ளி வரை காத்திராமல் வார நாட்களிலும் தியேட்டர் செல்வது. Deewangae மாதிரி படு சுமாரான படம் கூட எங்களை யோசிக்க வைத்ததில்லை. இவ்வளவு வரைவில் Bollywood-க்கான எங்கள் நன்றிக் கடனை அடைத்து விடுவோம் என நினைக்கவில்லை. வளர்க Bollywood!  2-3 வாரங்களில், இந்த routine-உம் எங்களின் சினிமா பொழுது போக்கிற்கான எதிர்ப்பார்ப்பில் ஏதோ குறை உள்ள உணர்வை ஏற்ப்படுத்தியது.

ஹும்...அடுத்து என்ன செய்வது?

வாடகை DVD! அதில் ஒரு சிறிய சிக்கல் ஏற்பட்டது. எங்களிடம் TV இல்லை. சரி அதனால் என்ன அதையும் சேர்த்து வாடகைக்கு எடுத்து விட வேண்டியது தான். தேடித் பிடித்து அதற்கும் ஒரு கடையை பிடித்தோம். அப்புறம் என்ன weekend complete showtime தான். இங்க்லீஷ், ஹிந்தி மற்றும் தமிழ் எனக் கலந்து வெள்ளி இரவிலிருந்து திங்கள் காலை வரை 14 திரைப்படங்கள் பார்த்த weekend-கள் உண்டு.  அதற்காக வார நாட்களில் தியேட்டர் செல்வதை நிறுத்தவில்லை. ஏன்னா எங்களுக்கு வாழ்க்கையில் discipline தான் முக்கியம். இந்த routine எங்களுக்கு set ஆனது போல் கொஞ்சம் தோன்றியது. இந்த குழுவின் குறிக்கோள் 'chillax with cinema' எனத் உங்களுக்கு தோன்றி இருந்தால் அதில் தவறில்லை - சக batchmates அப்படி தான் எண்ணினார்கள்.

ஹும்...அடுத்து என்ன செய்வது?

இப்பவும் இந்த கேள்வி ஏன் என கேட்கத் தோன்றுகிறதா? வாஸ்த்தவம்தான். இம்முறை கேட்டது என்னவோ நாங்கள் இல்லை. காலம். காண்போம் அடுத்த பகுதியில்...   
Post a Comment

2 comments:

  1. Jay said...

    "ஏன்னா எங்களுக்கு வாழ்க்கையில் discipline தான் முக்கியம்."

    This one cracked me up :D

  2. கி.வி said...

    Great. Nice to see you visit the blog.