My Tweets @bloggerzbible

06 September, 2014

Awake in the dark (Roger Ebert)

| | with 0 comments |

திரைப்படம் காணும் நம் ஒவ்வொருவரிலும் ஒருவித விமர்சகன் ஒளிந்துள்ளான். இதையே முழுநேரத் தொழிலாக கொண்டவர்கள் சிலரே. அதிலும் சிறந்த விமர்சகருக்கான அங்கீகாரம் பெற்றவர்கள் மிக சிலர். அந்த வகையில் திரைத் துறையின் மாபெரும் விமர்சகர் என புகழ் பெற்றவர் Roger Ebert. இவர் Chicago Sun-Times இதழில் பல ஆண்டுகள் விமர்சகராக பணி புரிந்தவர். கலைத் துறையின் உயர்ந்த விருதான Pulitzer Prize-ஐ முதன் முதலாக film criticism-ற்காக வென்றவர். சமீபத்தில் அவருடைய முக்கிய படைப்பான "Awake in the dark" என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வலைப்பூ அதைப் பற்றியது தான்.
இந்தப் புத்தகத்தில் அவருடைய 40 வருட காலத்தின் விமர்சனங்கள், சிறந்த படைப்புகளின் பட்டியல், பேட்டிகள், விமர்சனத் துறை பற்றிய பார்வை, கட்டுரைகள் மற்றும் தனது அனுபவங்கள் என அணைத்தும் அடக்கம்.


விமர்சனம்

Hollywood திரைப்படங்களின் விமர்சனம் தான் இந்த புத்தகத்தின் பிரதானம். "சிறந்தவை" என்ற தலைப்பில் 1967 முதல் 2005 வரை ஒவ்வொரு வருடத்தின் (அவர் பார்வையில்) சிறந்த திரைப்படத்தின் விமர்சனத்தை வழங்கியுள்ளார்.  Bonnie and Clyde-ல் துவங்கி Nashville, Cries and Whispers, The Color Purple, Schindler's List, God Father, Good Fellas என The Crash வரை பட்டியல் செல்கிறது. இந்தப் பகுதிக்காக தான் நான் இந்தப் புத்தகத்தையே வாங்கினேன். ஆனால் உண்மையில் மற்ற பகுதிகள் போல் என்னை இது ஈர்க்கவில்லை. தனிப்பட்ட முறையில் விமர்சனங்களில் திரைப்படத்தை தாண்டி நிறைய நான் எதிர்ப்பார்த்ததால் அப்படி இருக்கலாம். ஆனால் ஒரு பத்திரிகைக்காக பல்வேறு தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் கோணத்தில் பார்த்தால் அந்த குறை மறைந்து விடும். 40+ ஆண்டுகள் ஒரே பத்திரிக்கைக்கு எழுதுவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று. ஒரு ரசிகனின் உணர்வுகளையும் மனித வாழ்க்கையின் சம்பந்தத்தையும் மிக எதார்த்தமாக அவரது விமர்சனங்கள் வெளிப்படுத்தியிருப்பதை நாம் எளிதாக காணலாம்.. 
ஒரு சில documentaries மற்றும் foreign films-ம் தனி பகுதிகளாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இவற்றை "சிறந்தவை" என்றல்லாமல் "சிறந்தவற்றில் சில தேர்வுகள்" என குறிப்பிட்டுள்ளார்! Satyajit Ray-வின் The Music Room (1999) இதில் ஒன்று. 
 

கட்டுரைகள் (think pieces)

இந்தப் புத்தகத்திலியே என்னை மிகவும் கவர்ந்த பகுதி இது தான். இந்த பகுதியில் வெளி வந்த ஒவ்வொன்றும் திரை உலகின் ஏதாவது ஒரு அடிப்படை கருத்தை புதிய கோணத்தில் சிந்திக்க வைப்பனவாக இருக்கும். அதில் நிச்சயமாக படிக்க வேண்டியவை இரண்டு.
 
"The case for an 'A' rating" (1990): அமெரிக்க திரைப்பட துறையில் அந்த காலக் கட்டத்தில் இருந்த சான்றிதழ்கள் - G, PG, PG-13, R மற்றும் அங்கீகாரமில்லாத  X. Roger Ebert-ன் பிரச்னையே இந்த R மற்றும் X-ற்கு நடுவில் ஒன்றும் இல்லாதது தான்.  இதற்கு லாப நோக்கம் கொண்ட தியேட்டர் உரிமையாளர்களும் ஒரு காரணம். Sexual content (X-rating) வகையறாவை சேராத பெரியவர்கள் மட்டும் பார்க்கும் ரகத்தை சேர்ந்த பல நல்ல திரைப்படங்கள் (The Cook, the Thief, Her Lover, His Wife) நடுவில் தத்தளித்தன. R ரகம் இல்லாதனால் X எனச் சொல்லலாமா? சிந்திக்க வேண்டிய ஒன்று. இன்று NC-17 சான்றிதழ் வந்து விட்டது. 

"A pulitzer for movies" (1997): Tony, Emmy, Oscar, Grammy, National Book Awards என பல பிரசித்திப் பெற்ற விருதுகள் அந்தந்த துறையை சார்ந்த குழுவின் மூலமாக தேர்ந்தெடுத்து வழங்கப் படுகிறது. ஆனால் pulitzer விருது ஒரு தனிப்பட்ட வல்லுநர்க் குழுவால் கலைத்துறை மற்றும் ஊடக பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இதில் திரைப்படங்களுக்கு இடம் இல்லை. Roger Ebert-ன் வாதம் Oscars மற்றும் இதர விருதுகளில் box office hit, மக்கள் ஆதரவு மற்றும் உணர்ச்சிப்பாங்கு - இவைகளின் ஆதிக்கம் நிறைய காணப்படுகிறது. இதிலிருந்து விடுபட்டு நடுநாயகமான தேர்வு pulitzer மூலமாக கிடைக்கும் என நம்பினார். நல்ல சிந்தனை. புத்தகம், நாடகம், இசை, பத்திரிக்கையியல் போன்றவைகளில் ஒரு தனி மனிதனின் படைப்பு அதிகம் மாறாமல் அப்படியே நம்மை வந்தடைகிறது. சினிமா அப்படி இல்லை. இயக்குனரின் பங்கு அந்த மாதிரி என்றாலும் மற்ற பல விஷயங்கள் (இசை, தொகுப்பு, இத்யாதி) ஒரு குழுவின் படைப்பாக நம்மை வந்தடைகிறது. இதனால் கூட pulitzer விருது சினிமாவிற்கு பொருந்தாமல் விட்டிருக்கலாம் என எண்ணுகிறார். 
இந்த மாதிரி இன்னும் சில கட்டுரைகள்.

பேட்டிகள் 

இந்த பகுதியை படித்தால் நமக்கு பொறாமையாக இருக்கும். திரைப்படத் துறையில் இவர் காலக் கட்டத்தில் வாழ்ந்த வரலாற்று புகழ் பெற்ற முக்கால்வாசி கலைங்கர்களுடன் பழகி பேட்டி காணும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்திருக்கிறது. Ingmar Bergman, Martin Scorsese, Warren Beatty, Steven Speilberg, Lee Marvin என நீண்ட பட்டியல். பொதுவாக விமர்சனமும் பேட்டியும் இரு துருவங்கள் மாதிரி. ஆனால் Chicago Sun-Times-ல் எல்லாமே இவர் தான். ஒரு பேட்டியாளன் நடுத்தரமான விமர்சனத்தை கொடுப்பது கடினமான ஒன்று என இவரே குறிப்பிட்டுள்ளார். இதை தாண்டி இறக்கும்வரை தன் தொழிலை கச்சிதமாக செய்தார் என்பதுதான் உண்மை.

திரை விமர்சனம் பற்றி

இந்த பகுதியில் அவருடைய விருப்பு வெறுப்புகளை விவரித்திருப்பார். தனக்கு பிடித்த genre (movement, suspense, hero-வாக நல்லவர்கள் மட்டுமல்லாமல் தீயவர்களும் வருவன போன்றவை), கலைங்கர்கள் (Martin Scorsese,Altman,Coppola), சில திரைப்படங்கள் மற்றும் அதில் தனித்து நின்ற காட்சிகள் (Casablanca, Singin' in the rain, The third man) என எடுத்துக் காட்டியிருப்பார். Silent மற்றும் black and white திரைப்படங்கள் மீது உள்ள ஈர்ப்பை வெளிப்படுத்தியிருப்பார். Home video-க்கள் மூலம் ரசிகர்கள் இழந்த theatre அனுபவத்தையும் சுட்டிக் காட்டி இருப்பார். (சற்று சலிப்புடன்) விமர்சகர்களை பார்த்து கேட்கப்படும் முக்கிய கேள்விகளாக மூன்றை விவரித்திருப்பார்: ஒரு நாளைக்கு சுமார் எத்தனை படங்கள் காண்பீர்கள்? ஒரே படத்தை எத்தனை தடவை காண்பீர்கள்? விமர்சனம் செய்யும் திரைப்படத்தை உண்மையில் கண்டீர்களா? மேலும் இவற்றுக்கு என்ன பதில் கூறினாலும் நம்புவார்களென  ஒரு வித கேலியுடன் எழுதியிருப்பார்.

ஒரு சிறு ஞாபகக் குறிப்பு

படையென வெளி வரும் திரைப்படங்களுக்கு மத்தியில் நல்லவற்றை அடையாளம் காட்டி அதை காணுவதால் என்ன எதிர்பார்க்கலாம் என சரியாக எடுத்துரைக்கும் பொறுப்பு தானுட்ப்பட  எந்த ஒரு நல்ல விமர்சகனுக்கும் உள்ளது என்ற கருத்தோடு இந்த கடைசி பகுதியின் மூலம் இந்த புத்தகத்தை முடிக்கிறார்.

சராசரி ரசிகனைக் காட்டிலும் ஒரு விமர்சகன் (திரையரங்கின்) இருட்டில் முழிப்போடு இருக்க வேண்டும் என்பதை "Awake in the Dark" மூலம் எடுத்துரைத்திருக்கிறார். திரைப்படத்தை விரும்புகிறவர்கள் முக்கியமாக விமர்சகனாக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
Post a Comment

0 comments: