My Tweets @bloggerzbible

16 January, 2014

A History of Narrative Film (3rd edition) by David A. Cook: பகுதி 1

| | with 0 comments |
உலக சினிமா மற்றும் சினிமா தயாரிப்பிணைப் பற்றி எழுதப்பட்ட நூல்களில் இது ஒரு முன்னோடியாக கருதப்படுகிறது. சுமார் 300–க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பாடப் புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நீங்கள் history and facts தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவராக இருந்தால் மட்டுமே மேற்கொண்டு படியுங்கள்!
சினிமாவின் தொழில்நுட்பம், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய திரை வரலாறு, இத்துறையில் நீங்கா இடம் பெற்ற (பெறாதவையும் கூட) வல்லுனர்கள் மற்றும் திரைப்படங்கள் எனப் பறந்த தகவல்களைக் கொண்டது இந்நூல். இந்த பதிப்பு இந்நூலைப் பற்றிய விமர்சனம் அல்ல. நான் அறிந்த சில பல துளிகள். அவ்வளவே. இதை 2 பகுதிகளாக பிரித்துப் பார்க்கலாம்1. அமெரிக்காவின் திரை வரலாறு 2. ஐரோப்பாவின் வரலாறு 3. ஆசியா மற்றும் இதர திரை வரலாறு. இது முதலாவது.

இந்த புத்தகத்தில் சினிமா என்று குறிப்பிடிவது “narrative film” அல்லது “motion pictures” என்பதை தான். 1900-க்கு முன்னர் சினிமா பெரும்பாலும் ஆராய்சசிகூடங்களில் தான் முடங்கி இருந்தது. பின்னர் Phonograph, Kinetograph, cinématographe, Kinetoscope, Vitascope, மற்றும் Mutoscope என பல பரிணாமங்களை தாண்டி வளர துவங்கியது. அமெரிக்கா-வை பொறுத்தவரை 1903-ல் Edwin S. Porter-ன் படைப்பில் வெளி வந்த The Great Train Robbery தான் narrative film-ன் உதயமாக கருதப்படுகிறது. அதன் நீளம் 1 reel. இதன் அமோக வெற்றி தான் nickelodeons (nickel theatre) எனப்படும் திரை அரங்குகளையும் சினிமா முதலீட்டாளர்களையும் உருவாக்க காரணமாக இருந்தது. Audience என்றுப் பார்த்தால் பெரும்பாலனோர் older working class மக்கள் தான். 1908 போல சுமார் 20-க்கும் மேற்ப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியில் இருந்தன. அதில் முன்னோடியாக திகழ்ந்த சில ஒன்றாக இணைந்து Motion Picture Patents Company (MPPC) என்ற நிறுவனத்தை அமைத்தன. இந்நிறுவனம் சினிமாத் துறையின் equipment, film stock, producer and exhibitor rights என  ஒவ்வொரு அங்கத்தையும் licensing, patents மற்றும் royalty மூலம் இரும்புக் கரம் கொண்டு ஆக்கிரமித்தது. அதுவே நாளடைவில் பல எதிர்ப்பாளர்களை விதைத்து அதன் மூலம் National Independent Moving Picture Alliance என்ற போட்டி நிறுவனம் உருவாக காரணாமாக அமைந்தது. இந்த ‘early independents’ அமெரிக்கா-வின் திரைத் துறையை மாற்றி எழுதி அமைத்ததில் பெறும் பங்கு வகித்தனர். 1-ரீல் திரைப்படங்கள் பல ரீல்களாக வளர்ந்ததின் முக்கிய காரணம் இவர்கள்.

The Silent Years, 1910-27

Pre-World War I American cinema

சினிமா வரலாற்றில் சில தனிநபர்களின் தாக்கம் இன்றியமையாததாக இருந்துள்ளது. அதில் D.W. Griffith-க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இவரை “the man who invented Hollywood” ,“the Shakespeare of the screen” என்று குறிப்பிடுவதும் உண்டு. 1907-ல் ஒரு நடிகனாக தொடங்கினாலும் சினிமாவிற்கான அவரது முக்கிய பங்களிப்பு பின்னர் இயக்குனராக இருந்த காலக் கட்டம் தான். Editing, narrative techniques, camera and movement என்று பல பரிசோதனைகளை செய்து inter-cutting, pan shots, long shots போன்ற நுணுக்கங்களை பழக்கத்திற்கு கொண்டு வந்தார். Audience-ஐ திரைக்கதையுடன் இணைய வைக்கும் யுக்த்தியை நன்கு அறிந்திருந்தார். அவரது Birth of Nation (1915) மொத்த அமெரிக்க-வையும் திரும்பி பார்க்க வைத்தது. முதலில் கிடைத்த அமோக வெற்றி பின்னர் படத்தின் “racist” கருவின் காரணமாக எதிர்ப்பையும் சந்திக்க நேர்ந்தது. இதில் மறுக்கமுடியாத ஒரு விஷயம் – சினிமா இவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு சாதனம் என்பதை இப்படம் உணர்த்தியது தான். இதை தொடர்ந்து வெளி வந்த Intolerance film-making-ஐ இன்னும் ஒரு படி மேலே கொண்டு சேர்த்தது. நான்கு வரலாற்று காலக்கட்டங்களைப் பற்றிய இக்கதை பெரும்பாலான மக்களுக்கு புரியாத காரணத்தினால் box-office-ல் தோல்வியைத் தழுவியது! இதற்கு பின்னர் இவர் பல திரைப்படங்களை வெளியிட்டாலும் “Innovation” என்று மேலும் எதுவும் கொண்டுவரவில்லை.

Hollywood in twenties

முதலாம் உலகப் போரின் முடிவில், சினிமாத்துறை நிறைய மாற்றங்களை காண ஆரம்பித்தது. Thomas Ince மற்றும் Mack Sennett-ன் வழிகாட்டலால் Studio system (factories for large-scale production of mass entertainment) உதயமானது. திரைப்படத்தின் நீளம் அதிகரித்தது. தயாரிப்பு செலவு பன் மடங்காக உயர்ந்தது. சினிமாத்துறை ஒரு தனி industry-ஆக உருப்பெற்றது. Wall Street சினிமாத்துறையில் முதலீடு செய்ய ஆரம்பித்தது. Audience பெரும்பாலும் middle-class வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
இக்காலக்கட்டத்தின் முக்கிய படைப்பு வகை (genre) slapstick comedy என குறிப்பிடப்படும் அமளி நகைச்சுவை தான். இதில் வரலாறு மறக்க முடியாத நபர் – Sennett அறிமுகம் செய்த Charlie Chaplin. தனது அபார திறமையால் அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகத்தையே அவரது ரசிகனாக்கியவர். இவரைப் போலவே இந்த genre-ல் புகழ்பெற்ற மேலும் சிலர் - Buster Keaton, Harold Lloyd மற்றும் Laurel and Hardy. இது அல்லாமல் மற்றும் இரண்டு genre-களும் முக்கிய பங்கு வகித்தன. அதில் முதலாவது - "new morality" எனப்படும் sex, violence and drugs-ஐ மையம்மாக கொண்டவை. இதை பிரகடனப்படுதியதில் குறிபிடத்தக்கவர்கள் Cecil DeMille மற்றும் Lubitsch. Ten Commandments திரைப்படம் இந்த genre-ஐ சார்ந்தது. இக்காலக்கட்டத்தின் மற்றொரு genre துணிச்சல் வீரர்களை மையம்மாக கொண்டவை. Douglas Fairbanks நடித்த The Three Musketeers, Robin Hood போன்றவை இதன் உதாரணங்கள்.

The coming of sound and color, 1926-35

சினிமா “silent era” கட்டத்தில் இருந்து அடுத்து பெரிய முன்னேற்றத்தை சந்தித்த காலம் இது. Phonofilm, Vitaphone, Photophone மற்றும் Movietone என ஒலியை நோக்கி பல கருவிகள் உபயோகத்திற்கு வந்தன. ஒலி பெருத்த வரவேற்ப்பையும் வெற்றியையும் தந்தாலும் வேறு ஒலிப்பதிவு, தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பில் சிக்கல்களை சந்திக்க நேரிட்டது. இதில் தத்தளிக்கும் பொழுதுதான் postsynchronization, rerecording, or dubbing என்ற தொழில்நுட்ப வளர்ச்சி தோன்றியது. இன்றுவரை அது நிலைத்துள்ளது. ஒலி மறைமுகமாகவும் பல மாற்றங்களுக்கு காரணமாக இருந்தது. ஒலிப்பதிவாளர்கள், எழுத்தாளர்கள், மேடை கலைங்கர்கள், இசை வல்லுனர்கள் என புதிய வாய்ப்புகளை சேர்த்தது.
ஒலியின் வருகையால் படைப்பு வகைகளும் மாறின. Dialogue comedies, biographies, horror-fantasy போன்ற பல genre உதித்தாலும் அதில் இரண்டு தனித்தன்மை பெற்று விளங்கியது. ஒன்று “musical” genre. புகழ்பெற்ற Broadway musicals இதை பறைசாற்றும். மற்றொன்று “animation” genre. Walt Disney-ன் Steamboat Willie (1928—Mickey Mouse’s debut) மற்றும் The Three Little Pigs (1933) அதில் குறிப்பிடத்தக்கவை.

சினிமா உலகில் Color-ன் தோற்றமும் கிட்டதட்ட இதே காலக்கட்டத்தில் தான். ஒளியைப் போல இதுவும் Monochrome, Kinemacolor, Chronochrome என பல மாறுதல்களை கடந்து 1922-ல் Technicolor Corporation அறிமுகபடுத்திய ‘three-colour system’ மூலம் சற்று நிலைப்பெற்றது. அடுத்து 25 ஆண்டுகளுக்கு இது பின்பற்றப்பட்டது. The Garden of Allah, 1936; Snow White and the Seven Dwarfs, 1937; The Adventures of Robin Hood, 1938; The Wizard of Oz, 1939; Gone with the Wind, 1939  பிரசித்தி பெற்ற கலர் படங்கள்.
ஒலி மற்றும் கலர் படங்களினால் நிகழ்ந்த மற்றொரு பெரிய தாக்கம் – crystallization of studio systems. அது வரை சிறிய அளவில் செயல்ப்பட்டு வந்த MGM, Paramount, Warner Bros, 20th Century Fox மற்றும் RKO studios எல்லாம் ஆஜானுபாகுவான தயாரிப்பு நிறுவனங்களாக உருவான. இதை “studio era” என்று கூட சொல்லலாம். 1930-களில் சினிமாத்துறை கண்ட மறக்கமுடியாத இயக்குனர்கள் 4 பேர் – Josef von Sternberg, John Ford, Howard Hawks மற்றும் Alfred Hitchcock.

Wartime and postwar cinema: 1940 – 1951

D.W Griffith-க்கு இணையாக Hollywood கருதும் இன்னொருவர் - Orson Welles. 1941-ல் இவர் படைத்த Citizen Kane Hollywood-ன் master-piece-ஆக கருதப்படுகிறது. இதைப் பற்றி அறிய நான் முன்னர் எழுதிய வலைப்பூவைப் படிக்கவும்!
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் அமெரிக்காவின் பொருளாதாரம் நல்ல நிலைமையில் இருந்ததால் 1942-45 வரை Hollywood அபாரமாக செயல்ப்பட்டது. ஆனால் இது நீடிக்க்கவில்லை. Federal anti-trust law 5 ஜாம்பஹவான்களோடு மற்ற studio-க்களையும் நசுக்கியது; Television-ன் கண்டுப்பிடிப்பு theatre-க்கு செல்லும் மக்களை வெகுவாக வீட்டில் முடக்கியது; post-war fear of communism பரவலாக உணரப்பட்டது. இவை எல்லாம் சேர்ந்து Hollywood-ஐ நிலை குலைய வைத்தது.
போர் காலக்கட்டத்தில் படைப்பு வகைகள் இரண்டு வகைப்பட்டன. ஒன்று அமெரிக்க தேசப்பற்றை எடுத்துக்காட்டுபவையாக இருந்தது. மற்றொன்று documentaries-ஆக இருந்தது. இதில் மிக பிரசிதிப்பெற்றது Frank Capra-வின் seven-part series Why We Fight (194244). போர் முடிந்தவுடன் traditional genre-களான western and musicals-க்கு பதில் thought-provoking or perverse stories குறைந்த budget-ல் எடுக்கப்பட்டன. Film noir (black film) எனப்படும் வார்த்தை இந்தக் காலக்கட்டத்தின் கதைகளில் காணப்பட்ட cynicism, darkness மற்றும் despair-ஐ குறிக்கும் அடைச் சொல்லாக உருவானது. 1940-களில் தான் Hollywood-ன் வரலாற்றிலியே முகத்தை சுளிக்க வைக்கும் அதிக படங்கள் தோன்றின. Tay Garnett’s The Postman Always Rings Twice, 1946; Orson Welles’s The Lady from Shanghai, 1947; Jacques Tourneur’s Out of the Past, 1947; Abraham Polonsky’s Force of Evil, 1948 அதில் சில.

Hollywood, 1952-65

நலிவடைந்திருந்த Hollywood Television-ன் போட்டியை சமாளிக்க இரண்டு யுக்தியை கையாண்டது. ஒன்று – widescreen (aspect ratio1.33 to 1 இருந்து 2.55 to 1 ஆக விரிவடைந்தது). மற்றொன்று – color. 1952-ல் multiple-camera wide-screen (Cinerama) and Stereoscopic 3-D (Natural Vision) பலத்த ஆர்வத்தை ஏற்படுத்தினாலும் 1953-ல் Twentieth Century–Fox The Robe’ என்றப் படத்தில் அறிமுகப்படுத்திய CinemaScope வடிவமைப்பு அமோக அங்கீகாரம் பெற்றது. War and Peace, Around the World in Eighty Days, and The Ten Commandments (remake) blockbusters இதைத் தழுவி உருவானவை. Hitchcock மட்டும் தான் இந்த கட்டத்தில் குறிப்பிடும்படியாக திகழ்ந்தார். Rear Window, 1954; The Man Who Knew Too Much, 1956; Vertigo, 1958; North by Northwest, 1959; Psycho, 1960; The Birds, 1963 – எல்லாம் அவருக்கென thriller உலகில் தனி முத்திரை பதிக்க சான்றாக விளங்கியன.

Hollywood, 1965 – present

Youth cult genre Hollywood-க்கு ஒரு சிறிய turning point அமைத்துக் கொடுத்தது. இதை மையம்மாக வைத்து வெளிவந்த Penn’s Bonnie and Clyde (1967), Stanley Kubrick’s 2001: A Space Odyssey (1968), Peckinpah’s The Wild Bunch (1969), Wexler’s Medium Cool (1969), and Dennis Hopper’s Easy Rider (1969) ஆகியவை அதிக அளவில் இளைஞர் இளைங்கிகளை திரையரங்குகளுக்கு ஈர்த்தது.  ஆனால் அதிக காலம் நீடிக்கவில்லை. 1968-ல் Hollywood கண்ட ஒரு முக்கிய நிகழ்வு - rating system அறிமுகமானது. G, PG-13, R, etc அதில் உதயம் ஆனது தான்.
1970-80களில் ஒரு சில திரைப்படங்கள் Hollywood வரலாற்றில் அது வரை காணாத budget மட்டும்மல்லாமல் profit-உம் கண்டது. Francis Ford Coppola’s The Godfather, 1972; Steven Spielberg’s Jaws, 1975; George Lucas’s Star Wars, 1977, Spielberg’s Close Encounters of the Third Kind (1977) – இதற்கான உதாரணங்கள். இவை அந்த தொழில்த்துறைக்கே ஊக்கமாக அமைந்தன. இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த எல்லா இயக்குநர்களுமே film schools மூலம் இத்துறையைப் பற்றி நன்கு அறிந்து வந்தவர்கள்.
1980-களில் அமெரிக்காவின் திரைத்துறையில் ஏற்ப்படுத்திய தாக்கம் தொழில்நுட்ப வளர்ச்சியினால் இருந்தது. திரைப்பட விநியோகத்தில் Cable networks, direct-broadcast satellites, and videocassettes என பல புதிய பரிணாமங்கள் தோன்றின. திரைப்பட தயாரிப்பில் computer-generated graphics-ன் மூலம் special effects நினைத்து பார்க்க முடியாத உயரத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தது. சினிமாவிற்கு மேலாக பல “televisual” கதைகள் இந்த புதிய விநியோகத்தை ஒட்டி படர்ந்தன.
1990- களில் computer-generated animation and special effects Hollywood-ல் “unprecedented visual sophistication”-ஐ அறிமுகப்படுத்தியது. Jurassic Park, 1993; Star Wars: Episode I—The Phantom Menace, 1999; The Matrix, 1999 – போன்ற திரைப்படங்கள் மக்களை திரையரங்குகளுக்கு இழுத்து வந்தன. கூடவே TV உலகிலும் இந்த animation Toy Story (1995), Antz (1998), and Chicken Run (2000) என உலா வந்தன. Internet marketing மூலமாக low-cost படங்கள் கூட blockbuster நிலையை அடைய கூடும் என தயாரிப்பு நிறுவங்கள் அறிந்த காலம் இது.
21-ம் நூற்றாண்டில் technology முனேற்றப் பயணம் தொடர DVD, satellite televisions, high-class 3D என திரைத்துறை பல மைல் கற்களை தாண்டி புதிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.


Hollywood-ன் வரலாறு இவ்வாறெனின் ஐரோப்பாவில் நிலை என்ன? பகுதி 2–ல் காணுவோம்..
Post a Comment

0 comments: