My Tweets @bloggerzbible

16 March, 2014

A History of Narrative Film (3rd edition) by David A. Cook: பகுதி 2

| | with 0 comments |

Pre-World War I European cinema

முதலாம் உலகப் போருக்கு முன்னர் ஐரோப்பாவின் திரைத்துறை பெரும்பாலும் இத்தாலி மற்றும் பிரான்சு நாட்டின் படைப்புகளையே சார்ந்து இருந்தது. அக்காலக் கட்டத்தில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்திய விஷயங்கள் இரண்டு. அதில் முதலாவது - Comic character-ஐ மையம்மாக வைத்து உருவான திரைக்கதைகள். இரண்டாவது - film d’art movement. L’Assassinat du duc de Guise என்ற படத்தின் மூலம் அறிமுகமான இந்த வகையில், பிரசிதிப்பெற்ற மேடை நாடங்கங்கள் திரைப்படங்களாக வடிவமைக்ப்பட்டன. மக்கள் பல ரீல்கள் கொண்ட serious திரைப்படங்களை ரசிக்க முன்வந்தனர். இவைகளின் வளர்ச்சி “feature film” உருவாக வித்தாக அமைந்தது. முக்கியமாக இத்தாலி நாட்டின் “superspectacle” genre-ஐ சார்ந்த கதைகள் “feature film” அடுத்த கட்டத்தை எட்ட உரு துணையாக இருந்தன. Gli ultimi giorni di Pompei (The Last Days of Pompei, 6 reels, 1908), Quo Vadis? (“Whither Are You Going?” 9 reels, 1912) மற்றும் Cabiria (12 reels, 1914) இதில் குறிப்பிடத்தக்கவை. Cecil B. DeMille, Ernst Lubitsch, and especially D.W. Griffith போன்ற சிறந்த இயக்குனர்களிடம் இந்த Italian superspectacle-களின் தாக்கத்தை நன்கு உணர முடியும்.

Post-World War I European cinema

போருக்கு முன்னர் சினிமாத் துறையில் உலக அளவில் அமெரிக்காவை காட்டிலும் ஐரோப்பியா முன்னோடியாக திகழ்ந்தது. இந்நிலைமை போரின் காரணாமாக தலைகீழாக மாறியது. ஆனால் இதில் முக்கியமாக இரண்டு நாடுகளைப் பற்றி குறியாக வேண்டும்.
முதலாவது Germany. வெளிநாட்டு திரைப்படங்களை ஒடுக்க Germany அரசாங்கம் உள்நாட்டிலியே சிறந்த திரைப்படங்களை உருவாக்க ஏதுவாக பல திட்டங்களை செயல்ப்படுத்தியது. 1919-ல் வெளிவந்த Das Kabinett des Dr. Caligari (The Cabinet of Dr. Caligari) உலக சினிமா வரலாற்றில் தனித்து பேசப்பட்ட “German Expressionism” movement பிறக்க காரணமாக திகழ்ந்தது. கனவுருவையும் திகிலையும் மைய்யமாக கொண்டு இந்த கதைகள் அமைக்கப்பட்டன. F.W. Murnau’s Der Januskopf (Janus-Faced, 1920) Fritz Lang’s Die Spinnen (The Spiders, 1919–20), Dr. Mabuse, der Spieler (Dr. Mabuse, the Gambler, 1922), the Wagnerian diptych Siegfried (1922–24), Kriemhilds Rache (Kriemhild’s Revenge, 1922–23), மற்றும் Metropolis (1926) இந்த வகையை பறைசாற்றும் திரைப்படங்கள். Murnrau-வின் மற்றுமொரு படைப்பான Der letzte Mann (“The Last Man”; 1924) சிறந்த Camera யுக்தியின் (“unchained camera” technique) காரணாமாக இன்றளவிலும் ஒரு masterpiece-ஆக கருதப்படுகிறது.

இரண்டாவது Soviet Union. கிட்டத்தட்ட Germany-யின் நிலை போல உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. Eisenstein மற்றும் Pudovkin - இந்தக் காலக்கட்டத்தில் ஐரோப்பாவின் Silent film வரலாற்றை பெரிதாக ஆட்கொண்ட பலரில் முதன்மையானவர்கள் ஆவர். முறையே அவர்களின் படைப்புகளான Battleship Potemkin, 1925 மற்றும் Mother, 1926 உலக அளவில் பாராட்டும் அங்கீகாரமும் பெற்றன. ‘Theory of montage’ Eisenstein மூலம் உலகிற்கு அறிமுகமானது. ஆனால் Stalin மற்றும் Hitler-ன் ஆதிக்கத்தால் இந்த இரு நாட்டிலும் மெல்ல முன்னேறி வந்த சினிமாத்துறை தீடீரென்று உருக்குலைய ஆரம்பித்தது.


Europe in 1930s

Sound/ dubbing technology-ன் வெற்றியை அமெரிக்கா ஐரோப்பாவிலும் பரப்பியது. இதனால் Hollywood படைப்புகள் பரவலாக Great Britain-ஐ வந்தடைந்தது. மிகுந்த வரவேற்ப்பும் பெற்றது. இந்தக் காலக்கட்டத்தில் பல British படைப்பாளிகள் உதித்தநற். அதில் உலகம் மறக்க முடியாத நபர் - Alfred Hitchcock. முதலில் Britain-லும் பின்னர் Hollywood-லும் thriller genre-ல் நீங்க இடம் பெற்றார். Germany-யில் Hitler-உம் Italy-யில் Mussolini-யும் தங்களது propaganda-விற்காக சினிமாவை பயன்படுத்தினர். இதனால் sound era-வில் பெரும்பாலும் musical, comedies மற்றும் fascist நம்பிக்கையை ஒட்டி படங்கள் வெளியாகின.
France நாட்டில் நிலை சற்று வேறு மாதிரி இருந்தது. 1921-29 கட்டத்தில் சின்ன studio-க்கள் மூலம் வெளிவந்த படைப்புகள் Impressionism என வரலாற்றில் குறிப்பிடப்படும் avant-garde film movement உருவாக காரணமாக இருந்தன. 1930-களில் French சினிமாவை உலக அளவில் திரும்பி பார்க்க செய்ததில் மூன்று பேருக்கு பெறும் பங்கு இருக்கிறது - René Clair, Jean Vigo மற்றும் Jean Renoir. இவர்கள் படைப்புகளில் அபரிதமான சோகமும் வாழ்க்கையின் இருளும் முக்கிய வெளிப்பாடாக இருந்தது. அதிலும் Jean Renoir sound technology-யை மிக நுணுக்கமாக பயன்படுத்தி பல வெற்றிப்படங்களை உருவாக்கினார். The Crime of Monsieur Lange (1935), The People of France (1936) மற்றும் Grand Illusion, 1937 Renoir-ன் பிரசிதிப்பெற்ற படைப்புகளாகும்.


The French New Wave

உலகப் போருக்கு பின்னர் France நாட்டில் 1948-65 காலக்கட்டத்தில் உருவான “New Wave” திரைப்பட வரலாற்றில் இன்றியமையாத ஒரு நிகழ்வு. இந்த அலை அதுவரை பின்பற்றி வந்த மரபை மாற்றி, திரைப்படம் என்பது ஒளியும் ஒலியும் கொண்ட ஒரு மொழியாகவும் அதன் படைப்பாளியை அந்த மொழிக்கான எழுத்தாளராகவும் பறைசாற்ற துவங்கியது. மேலும் திரைப்படம் ஒரு தொடர்க் காட்சி அமைப்பாக மட்டுமிலாமல் பார்ப்பவர்களின் எண்ணத்தையும் உணர்வையும் ஆட்கொள்ளும் படியாக இருக்க வேண்டும் என நம்பியது இந்த அலை. ஆரம்பத்தில் குறும்படங்களாக வெளிவந்தாலும் 1959-ல் மும்மூர்த்திகள் Truffaut, Resnais மற்றும் Godard முறையே தங்களது படைப்புகளான Les Quatre Cents Coups (The 400 Blows), Hiroshima, mon amour மற்றும் À bout de souffle (Breathless) மூலம் சினிமா உலகத்தையே இந்த அலை மூழ்கடிதத்து. Chabrol, Rivette, Rohmer, Louis Malle, Agnès Varda, Chabrol, Rivette, Rohmer, Louis Malle, Agnès Varda, and Jacques Demy Jacques Demy மேலும் இதை விரிவுபடுத்திய பிரபல இயக்குனர்கள். New Wave-ன் தாக்கம் France-ஐ கடந்து, ஐரோப்பாவைத் கடந்து உலக வரைப்படத்தின் எல்லைகள் பலவற்றைக் கடந்து சினிமாவின் சித்தரிப்பை மாற்றி அமைத்தது.


New Cinema in Britain

1950-60களில் ஐரோப்பாவில் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய மற்றொரு நாடு – Britain. புகழ்ப் பெற்ற புத்தகங்களை ஒட்டியே அதுவரை திரைக்கதைகள் அமைக்கப்ட்டிருந்தன. Free Cinema movement அந்நிலைமையை மாற்றி அன்றாட வாழ்க்கையின் சித்தரிப்பை மேற்கொண்டது. இது ஒரு சமுதாயத்தின் அலையோடு சேர்ந்து நடுத்தர வர்கத்தினரை மையமாக வைத்து பேரலையாக எழும்பியது. அதன் மூலம் பிறந்தது தான் - New Cinema, or Social Realist. Reisz-னுடைய Saturday Night and Sunday Morning (1960) தான் இந்த அலைக்கு பச்சைக் கொடியாக அமைந்த திரைப்படம். Richardson-ன் Tom Jones (1963), Schlesinger-ன் Darling (1965) மற்றும் Far from the Madding Crowd (1967), Richard Lester-ன் இரண்டு Beatles films - A Hard Day’s Night (1964) மற்றும் Help! (1965), Anderson-ன் If… (1968) இக்காலக் கட்டத்தின் முக்கியப் படைப்புகளாகும்.


European Renaissance: West

Italy-ன் Fellini மற்றும் Antonioni தங்களது Neorealist வேர்களில் துவங்கினாலும் பின்னர் உருவாக்கிய படைப்புகள் மூலம் modernistic cinema நோக்கி சினிமாத் துறையை நகர்த்தி சென்றனர். இவர்களை தொடர்ந்து Olmi, Pasolini மற்றும் Bertolucci உலக தரம் மிக்க பல திரைக்கதைகளை வெளியிட்டனர். 1970-களில் பொருளாதார சீர்கேட்டின் காரணமாக Italy வெளிநாடுகளுடன் சேர்ந்து தயாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால் Italy-ன் தனித்துவமும் வற்ற நேரிட்டது.

Germany: New Wave-ன் தாகத்தால் நலிந்து கிடந்த சினிமாத் துறை சற்றே புத்துயிர் பெற்றது. Volker Schlöndorff-ன் Der junge Törless (1966; Young Torless) மற்றும் Alexander Kluge-ன் Die Artisten in der Zirkuskuppel: ratlos (1968; The Artists Under the Big Top: Disoriented) இதன் துவக்கமாக இருந்தது. பின்னர் Rainer Werner Fassbinder, Werner Herzog, மற்றும் Wim Wenders தங்களுக்கே உரித்தான பாணியில் பல சிறந்த திரைப்படங்களை உருவாக்கினார்கள். 1990-ல் Germany-ன் இணைப்பிற்கு பின்னர் பல திறமைசாலிகள் வந்தாலும் அவர்களின் வெளிப்பாடுகள் பெரும்பாலும் Hollywood-ல் தான் இருந்தது.

மேற்கு ஐரோப்பாவின் சற்றே சிறிய சினிமாத் தொழில்கூடங்களின் வரிசையில் தனித்து நின்ற இரண்டு நாடுகள் – Spain மற்றும் Sweden. இந்த நாடுகளிருந்து தலா ஒரு முக்கியப் பிரபலம் திரைப்பட வரலாற்றில் தங்களுகென்று ஒரு நிகரில்லா இடத்தை பெற்றனர். Spain-ன் Luis Buñuel world’s greatest satirist-ஆக கருதப்படுபவர். (1950; The Forgotten Ones), Él (1952; Torment), Nazarín (1958), Viridiana (1961), El ángel exterminador (1962; The Exterminating Angel), Belle de jour (1967), Le Charme discret de la bourgeoisie (1973; The Discreet Charm of the Bourgeoisie), and Le Fantôme de la liberté (1974; The Phantom of Liberty) இவரது புகழ் பெற்ற படைப்புகளாகும். Sweden-ன் Ingmar Bergman one of the all-time greats in international cinema. Det sjunde inseglet (1957; The Seventh Seal), Smultronstället (1957; Wild Strawberries),  Jungfrukällan (1960; The Virgin Spring), (1961; Through a Glass Darkly), Nattvardsgästerna (1963; Winter Light), and Tystnaden (1963; The Silence); Persona (1966), Vargtimmen (1968; Hour of the Wolf), and Skammen (1968; Shame) இவரது சிறந்த படைப்புகளாகும்.


European Renaissance: East

Poland கிழக்கு ஐரோப்பாவின் குரிப்பிடும்படியான சொற்ப நாடுகளில் முக்கியமான் ஒன்றாகும். மூன்று தலைமுறை சினிமாவாக வளர்ச்சி கண்டு பல சிறந்த படைப்புக்களை வெளியிட்டது இந்நாடு. Jerzy Kawalerowicz (Matka Joanna od aniolNw [Mother Joan of the Angels], 1961), Andrzej Munk (Eroica, 1957), மற்றும் Andrzej Wajda (Pokolenie [A Generation], 1954; Kanal [Canal], 1956; Popiól i diament [Ashes and Diamonds], 1958) Polish-school எனப்படும் முதலாம் தலைமுறையை சார்ந்தவர்கள். Roman Polanski, Jerzy Skolimowski இரண்டாம் தலைமுறையையும் Krzysztof Zanussi மூன்றாம் தலைமுறையையும் வளர்த்த முக்கிய நபர்களாவர்.

1960-களில் Poland தவிர Czechoslovakia நாட்டின் திரைப்படங்களுக்கும் உலக அரங்கில் நல்ல அங்கீகாரம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அத்திரைப்படங்களில் காணப்பட்ட ஒரு freshness. நான் முன்பு எழுதிய வலைப்பூவில் Czechoslovakia கதைகளின் அங்கீகாரத்திற்கு காரணம் புரியாமல் வினவியது நினவிற்கு வருகிறது!. இந்த பூகோளத்தில் குருபிடப் பட வேண்டிய மற்றொரு நாடு Hungary. சிறந்த திரைப்படக் கல்வியின் மூலம் István Szabó (1981; Mephisto), István Gaál (Magasiskola [Falcons], 1970), Márta Mészáros (Örökbefogadás [Adoption], 1975), மற்றும் Pál Gábor (1978; Angi Vera) இந்நாட்டின் பங்கை உலகத் அரங்கத்தில் பறைசாற்ற காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள். Bulgaria-வும் Romania-வும் ‘நானும் உள்ளேன் ஐயா’ என்ற அளவிலியே ஒளிர்ந்தன.

இந்த புத்தகத்தில் Hollywood போன்று ஐரோப்பிய திரைத்துறையின் 1970-களுக்கு பின்பான காலக்கட்டத்தின் சினிமாத்துரைப் பற்றி அதிகம் (எனக்கு?) காணப்படவில்லை.

இன்னும் கொஞ்சம் பாக்கி! எஞ்சிய நாடுகளைப் பற்றி பகுதி 3–ல் காணுவோம்...
Post a Comment

0 comments: