My Tweets @bloggerzbible

30 June, 2014

யாமிருக்க பயமே: ஊக்குவிக்க வேண்டிய முயற்சி

| | with 0 comments |
தமிழ் வலைப்பூ என்றாலும் இதுவரை ஏனோ ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பற்றி கூட எழுதவில்லை. சமீபத்தில் கண்ட யாமிருக்க பயமே  ஒரு சில வரிகளை எழுத தூண்டியது.

இந்த திரைப்படம் என்னைக் கவர்ந்ததற்கு சில காரணங்கள் உண்டு. பொதுவாக நல்ல action, love genre-களைக் காட்டிலும் horror திரைப்படங்கள் எடுப்பது சற்று கடினம். Comedy-யும் அதே போல் கஷ்டமான ஒன்று. Horror + comedy பற்றி சொல்லவே வேண்டாம். அந்த வகையில் ஒரு நல்ல திரைப்படத்தை எழுதி இயக்கிய Deekay-வை பாராட்டியே ஆக வேண்டும். இத்தனைக்கும் இது அவருக்கு முதல் முயற்சி என்று அறியும் பொழுது இந்த மாதிரி கலைங்கர்களையும் திரைப்படங்களையும் ஊக்குவிக்கும் பொறுப்பு ரசிகர்களான நமக்கு உள்ளது. நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட நடிகர் நடிகையோ, பெரிய budget-  விளம்பரமோ இல்லாமல் ஒரு தரமான திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதற்கு யாமிருக்க பயமே  ஒரு எடுத்துக்காட்டு.

கதை: கிரண்-ற்கு (கிருஷ்ணா) தனது தந்தையின் சொத்தான ஒரு மலைப்பிரதேச பங்களா இருப்பது தெரிய வருகிறது. தனது காதலியுடன் (ரூபா) சேர்ந்து அதை ஒரு hill resort-ஆக நடத்த திட்டமிடுகின்றார். அவர்களுடன் manager-ஆக சரத்தும் (கருணாகரன்) அவர் சகோதரி சரண்யா (ஓவியா) சமையர்காரியாகவும் இணைகின்றனர். துவங்கிய நாள் முதலே அங்கு வரும் விருந்தினர்கள் மர்மமான முறையில் இருந்து போகின்றனர். அதற்கான ஒரு flash-back மூலம் நமக்கு தெரிய வருகிறது. அதன் பின்னர் கிரணிற்கு மேலும் ஆபத்து காத்திருப்பது தெரிய வருகிறது. அதை சமாளித்தாரா இல்லையா என்பது தான் மீதிக் கதை

முதல் கால் மணி நேரம் சற்று தொய்வுடன் காணப்பட்டாலும் அதன் பின்னர் சூடு பிடிக்கும் திரைக் கதை கடைசி வரை நம் கவனத்தை சிதறடிக்காமல் கட்டி செல்கிறது. Climax வரை அந்த mix of horror and comedy பக்க பலமாக அமைந்திருக்கிறது.

Flash-back sequence கொஞ்சம் வாரணம் ஆயிரம்  படத்தை நினைவூட்டினாலும் அதை வேண்டும் என்கிற அளவிற்கு சிறியதாகவும் நுணுக்கமாகவும் சித்தரித்திருப்பது நல்ல யுக்தி. மேலும், S N Prasad-ன் music score எந்த இடத்திலும் நமது ஆர்வம் சோடை போகாமல் பார்த்துக் கொள்கிறது. ஆனால் தமிழ் சினிமாவின் விதிப்படி எண்ணிக்கையை தொட வேண்டும் என்று நான்கு பாட்டுகள் தேவையா என யோசித்திருக்கலாம். நாயகனின் சற்று தொய்வான நடிப்பு, எளிதில் யூகிக்கக்கூடிய காட்சியமைப்புகள் மற்றும் சில இரட்டை அர்த்த வசனங்களை கழித்துவிட்டு பார்த்தால் ஒரு நல்ல time-pass நமக்கு guarantee.

யாமிருக்க பயமே  மாதிரி முயற்சிகள் தான் தமிழ் சினிமா இன்னும் வளரும் கலைங்கர்களின் கையில் உள்ளது என்ற உணர்வை ஏற்ப்படுத்துகிறது.
Post a Comment

0 comments: