My Tweets @bloggerzbible

10 April, 2008

சினிமா பாரடைசோ (Nuovo Cinema Paradiso)

| | with 0 comments |

முதலில் எழுதிய 'Citizen Kane' ஒரு இயக்குநரின் திரைப்படம் என்றால் 'Cinema Paradiso' முழுக்க முழுக்க ஒரு ரசிகனுடையது. Italian cinema-வில் revival-ஐ உண்டாக்கிய திரைப்படங்களின் வரிசையில் இது ஒரு முன்னோடி என கூறினால் அது மிகை ஆகாது.


திரைக்கதை

Cinema Paradiso (திரையரங்கம்) தான் அந்த சிறிய Giancaldo ஊரின் அடையாளம். சினிமா என்றால் அப்படி ஒரு ஆர்வம் அந்த ஊர் மக்களுக்கு. தினமும் இரவானால், திரைப்படம் காண்பதற்காக ஆர்வத்துடன் திரண்டு விடுவார்கள். Toto என்ற சிறுவனும் அதில் ஒருவன். முக்கியமாக, சினிமா projection -ன் மீது தனி ஈர்ப்பு கொண்டிருந்தான். பள்ளி சென்றாலும், Toto -வின் சர்வ சிந்தனையும் சினிமா தான். அத்திரையரங்கத்தின் projectionist Alfredo முதலில் மறுத்தாலும் பின்னர் Toto-வின் உண்மையான ஆர்வத்தை உணர்ந்து projection பற்றி அணைத்தும் கற்று தருகிறார். தந்தை இல்லா Toto-விற்கு Alfredo தான் எல்லாமே - friend, philosopher and guide. ஒரு விபத்தில் Alfredo கண்களை இழக்க நேரிட, அந்தச் சிறு வயதிலியே Toto முழு நேர projectionist ஆகிறான்.
Toto வளர்ந்து இளைஞன் ஆகிறான். அப்பொழுது Giancaldo வரும் Elena அவனது வாழ்வில் பெறும் பாதிப்பை ஏற்படுத்துகிறாள். Toto-வின் உலகம் Projection-லிருந்து Elena-வாக மாறுகிறது. Toto-Elena காதல் விரைவில் வளர்ந்து மற்ற எதிர்ப்புகளை சமாளிக்க தயாராகிறது. சினிமாவில் சாதிக்கப் பிறந்த Toto-வை இந்த காதல் திசை திருப்பி விடுமோ என Alfredo கலக்கம் அடைகிறார். Elena-விடம் இதை விலக்கி உணர செய்கிறார். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சேர்ந்து கொள்ள, Alfredo விருப்பப்படி Toto-Elena முற்றிலும் பிரிய நேரிடுகிறது. Giancaldo-விலியே இருந்தால் வெறும் projectionist-ஆகவே வாழ்க்கை முடிந்து விடும் எனவும், சாதிக்க வேண்டும் என்றால் தனது ஊர் மற்றும் மக்கள் என்ற வட்டத்திலிருந்து வெளியேறி எங்காவது சென்று லட்சியத்தை தொடற வேண்டும் என Alfredo Toto-வை Rome-க்கு அனுப்பி விடுகிறார். காலம் உருண்டோடுகிறது. இன்று Toto இத்தாலிய சினிமாவிலலியே ஒரு சிறந்த இயக்குநர். நாடே போற்றினாலும், Toto என்ற தனி மனிதனுக்குள் அந்தக் காதலின் வலி ஆறாமல் இருந்தது. இந்நிலையில் Alfredo-வின் மரணம் காரணமாக Toto Giancaldo வருகிறான். அச்சமயம் Toto-விற்கு அணைத்து உண்மைகளும் தெரிய வர - துடித்து போகிறான். Alfredo செய்தது சரியா தவறா? சுபம்.


மற்றவை (எனது எண்ணங்கள், விமர்சனம், facts, trivia)

Toto இச்சமுதாயத்தில் ஒரு சராசரி மனிதனின் பிரதிபலிப்பு. நம் எல்லோர் வாழ்விலும் முக்கியமானது இரண்டு - love & career. இதில் ஒன்றை இழந்து இன்னொன்றைப் பெற்றால், நம் வாழ்க்கை முழுமையடையுமா? ஒரு பக்கம் காதல் தோல்வியினால் பாதிக்கப்படும் Toto என்னும் தனி மனிதன், இன்னொரு பக்கம் Toto-வின் படங்களை கண்டு மகிழும் மக்கள் - எது முக்கியம்? Toto-வின் சித்தரிப்பின் மூலம் Giuseppe Tornatore எழுப்பும் கேள்வி நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விஷயம். Each one of us have to be clear on our own definition of success.
தனியாக கஷ்டப்பட்டு வளர்த்த மகன் நெடுந்தூரம் பல காலம் பிரிந்து செல்லும் பொழுது ஒரு விதவை தாய்க்கு ஏற்படும் மன நிலை, காலப்போக்கில் Toto-வைப் போல அந்த ஊர், திரையரங்கம் மற்றும் (திரையரங்கம் செல்ல) மக்களின் ஆர்வம் போன்ற வற்றின் மாற்றங்களையும் அழகாக எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Cinema Paradiso-வில் உண்மையாக குறைப்பாடுகள் உண்டா எனத் தெரியவில்லை. ஏனென்றால் அதை அறிய படத்தின் mesmerising screenplay-விலிருந்து முதலில் விடு பட வேண்டும். அது நடக்கும் பொழுது end credits வந்துவிடும்!!
ஒவ்வொருவருக்கும் Cinema Paradiso ஒவ்வொரு காரணத்திற்காக பிடிக்கலாம். எனக்கானது Tornatore ஒரு autobiographical note-ல் குறிப்பிட்டுள்ளது தான். அது - மக்களிடையே (சின்னத் திரையின் ஆதிக்கத்தால்) பெரிய திரையின் மீதுள்ள நாட்டம் குறைந்து கொண்டு வருவது தான். மேலும் Tornatore சிறு வயதில் கண்டு வளர்ந்த ஒரு திரையரங்கமே Cinema Paradiso உருவாக காரணம் என கருதப்படுகிறது.
  • Cinema Paradiso-வின் original version 1988-ல் வெளியிடப்பட்டது. Box office-ல் வெற்றி பெறவில்லையென்றாலும் 1989-ஆம் ஆண்டிற்கான Academy Award for Best Foreign Film-ஐ வென்றது. அதன் நீளம் இதை விட 51 நிமிடங்கள் குறைவு. In fact, இதன் மூலம் இரண்டிற்க்கும் இடையே ஆன மைய்ய கருத்தே மாறுபடுகிறது. Original-ல் Toto-Elena காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. Alfredo-வும் அவர்கள் காதலுக்கு முட்டுக்கட்டையாக விளங்கவில்லை. அதில் Alfredo-Toto உடைய சினிமா காதல் தான் பிரதானம். எது சிறந்தது என்ற சர்ச்சை இன்று வரை ஓயவில்லை - பெறும்பாலும் ரசிகர்களின் வோட்டு புதியதிற்கும் விமர்சகர்களின் வோட்டு original-க்கும் என எடுத்துக் கொள்ளலாம்.
  • Cinema Paradiso-வின் original version-ஐ இயக்கிய பொழுது Tornatore-க்கு வயது 32!!
  • சில திரைப்படஙள் மொழி என்னும் சாதனத்தை கடந்து காட்சியமைப்பின் மூலமே பொருளை உணர்த்தி விடும் என்பதற்கு Cinema Paradiso ஒரு சிறந்த உதாரணம். (Subtitles இல்லாமல் பார்த்தால் கூட சுவாரஸ்யம் குறையாது)

Post a Comment

0 comments: