My Tweets @bloggerzbible

04 March, 2008

சிட்டிசன் கேன் (Citizen Kane)

| | with 1 comments |

Hollywood திரைபடங்களின் வரிசையிலே மிக சிறந்ததாக இது கருதப்படுகிறது. ரசிகர்களை சினிமாவின் பக்கம் ஈர்த்தது என்பதை விட பல பேர் சினிமா துறையில் கால் பதிக்க தூண்டுகோலாக இருந்தது என கூறுவதே சரியாகும். 1941-ல் Orson Welles இயக்கி மற்றும் நடித்து வெளியான 'சிட்டிசன் கேன்', 'modern motion pictures'-ன் வரலாற்றில் நீங்கா இடத்தை பிடிக்க போகிறது என்று யாரும் அப்பொழுது எதிர்பார்க்கவில்லை.

திரைக்கதை
அமெரிக்கப் பத்திரிக்கைத் துறையின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த Charles Foster Kane, இறக்கும் தருவாயில் 'Rosebud' என்ற வார்த்தையைக் கூறி விட்டு இறக்கிறான். அப்பேர்ப்பட்ட மனிதனின் வாழ்வின் இறுதியில் பாதித்த அந்த Rosebud-ன் பின்னனி தான் என்ன? அதை அறிய முற்படுகிறது ஒரு பத்திரிக்கைக் குழு. Kane-ன் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த அவனது இரண்டாம் மனைவி Susan Alexander, manager Bernstein மற்றும் நண்பர் Leland தங்களது கோணத்திலிருந்து Kane பற்றிய அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார்கள். அவர்கள் யாராலும் அதற்கான சரியான காரணத்தை கூற இயலவில்லை. Bernstein "Maybe that was something he lost" என தான் கருதுவதாக கூறுகிறார். இறுதியில், reporter Thompson-ன் "I don't think any word can explain a man's life. I guess Rosebud is just a piece in a jigsaw puzzle - a missing piece.'' என்ற கருத்து வெளிப்பாட்டுடன் தங்களது தேடல் முயற்சிகளை அந்தக் குழு முடித்துக் கொள்கிறது. இதை தொடர்ந்து Kane உடைய பொருட்களை எறிப்பது போல் காட்சி அமைக்க பட்டு இருக்கும். அப்பொழுது close-up-ல் 'Rosebud' என்று எழுத்துக்கள் உள்ள ஒரு பனி சறுக்கு மரமும் அதில் எரிவது போல் திரைபடம் முடிவடையும். அது Kane அவனது தாயிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து செல்லுப் படும் முன்னர் விளையாடிக் கொண்டிருந்த பனி சறுக்கு மரம்!

மற்றவை (எனது எண்ணங்கள், விமர்சனம், facts, trivia)
முதல் பார்வையில் 'சிட்டிசன் கேன்' ஒரு புகழ் பெற்ற பத்திரிக்கையாளனின் வாழ்க்கை சரித்திரமாக மட்டுமே தோன்றும். அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிக்கையாளர் William Randolph Hearst-ன் வாழ்க்கையுடன் ஒப்பிடப்பட்டாலும் Orson Welles அதை முழுமையாக ஏற்றுக் கொண்டதில்லை. மேலும் - பணம், புகழ் இருந்தும் உண்மையான அன்பிற்கு ஏங்கும் ஒரு மனிதன், சிறு வயதிலியே பாசமுள்ள தாயிடமிருந்து பிரிக்கப்படுவதால் ஆழ் மனதளவில் பெரும் பாதிப்பு அடைகிற சிறுவன், கவலையற்று விளையாடி திரிந்த அந்த சிறு பருவத்திற்கு ஏங்கும் வயோதிகன் என பல கோணங்களில் இத்திரைப்படத்தை வரையருக்க முடியும். உண்மையில் Charles Foster Kane-ன் வாழ்க்கை சித்தரிப்பின் மூலம் அமெரிக்க நாட்டின் சர்வாதிகார வெறி மற்றும் அதனால் வேரூன்றி வளரும் ஏமாற்றுத்தன்மையையும் பிரதிபலிக்கும் திரை படம் தான் இந்த 'சிட்டிசன் கேன்'. தலைப்பு செய்தியில் இடம் பெற, மக்களின் அபிப்பிராயத்தை கையாள, தனக்கு விருப்பமானதை சுற்றத்தினரிடமும் மற்றவரிடமும் தினிக்க எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செயல்படும் Kane முற்றிலும் ஒரு சராசரி அமெரிக்க ப்ரஜையின் எதிரொலி.
இந்த படம் ஒரு ரசிகனின் பார்வையில் மிக சிறந்ததாக இல்லாமல் போகலாம் ஆனால் இத்துறையில் உள்ள பல்வேறு கலைஞர்களுக்கு இது ஒரு பாடப்புத்தமாகும். இயக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, வசனம், கலை, ஒப்பனை என அணைத்து கோணங்களிலும் தனித்துவம் பெற்று விளங்குவதை காணலாம்.
இதற்கு முன்னர் - கலை, ஒளி மற்றும் பிருமாண்ட காட்சி அமைப்பு போன்றவைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டதில்லை. அதிலிருந்து மாறுப்பட்டு, அவைகளின் முக்கியத்துவத்தை அறிந்து செயல் பட்டால் எவ்வளவு தத்ரூபமாக காட்சி அமையும் என Welles நிரூபித்தார். மற்றும் ஒளிப்பதிவில் 'Pan focus\Deep focus' என்ற உத்தியை பிரபலப்படுத்தியதும் இந்த படமேயாகும் ('Soft focus' முறை தான் அது வரை நடைமுறையாக இருந்தது). இது போன்ற 'Deep focus' காட்சிகளில், foreground மற்றும் background இரண்டிற்குமே சரியான பங்களிக்கப்பட்டிருப்பதை காணலாம். அன்றைய கால கட்டத்தில் இந்த அளவு நேர்த்தியுடனும் ஆழ்மையுடனும் உள்ள காட்சி அமைப்புகளைக் கொண்டு ஒறு புதிய பாதையை உருவாக்கியது 'சிட்டிசன் கேன்'. Advanced Cinematography பற்றி கற்றுக்கொள்ள நினைத்தால், இப்படம் தான் பிள்ளையார் சுழியாக இருக்க வேண்டும்.

வளர்ந்து வரும் கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய இன்னுமோர் முக்கிய அம்சம் - இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மிக குறைந்த வெட்டுகளுடன் (cut) அமைக்கப் பட்டிருப்பது. இது பற்றி Orson கூறியது - "that differentiates men from boys"!
படத்தின் முதல் மற்றும் இறுதி காட்சியான 'No Trespassing' sign, Kane-ன் பிரச்சாரம், மனைவி பிரிந்து சென்ற பின் துயரத்துடன் செல்லுகையில் பன்மடங்காக கண்ணாடியில் பிரதிபலிக்கும் Kane-ன் உருவம், ஏற்கனவே குறிப்பிட்ட Deep focus காட்சிகள் என பல நம் மனதில் நீங்கா இடம் பெறுகிறது.


'சிட்டிசன் கேன்' பற்றி குறைபடுவர்களும் இல்லாமல் இல்லை. இரண்டு மணி நேரம் தான் என்றாலும், படத்தின் ஒட்டம் ஒரு நீண்ட கதையை கண்ட உண்ர்வை ஏர்படுதுகிறது. (இந்த பதிப்பும் அப்படியோ??!!) காட்சிகளின் நீளமும் அடுக்கு வசனங்களும் அணைத்து ரசிகர்களுக்கும் உகர்ந்தது என கூற முடியாது. "A classic is one which people praise but seldom read" என குறிப்பிடுவார்கள். சினிமாவில், இது அந்த ரகம்.
சில உதிரிகள்...
  • Hollywood-ல் முதன் முறையாக நிர்வாகம் உள்பட முழு பொருப்பும் ஒரு தனித் தயாரிப்பின் (RKO Pictures) கீழ் அளிக்கப்பட்டது 'சிட்டிசன் கேன்'-க்கு தான்.
  • எடுத்தவுடன் கதையின் காட்சியுடன் ஆரம்பித்து, 'Credits' -ஐ படத்தின் முடிவில் வருமாறு முதன் முறையாக வெளியிட்டது இதில் தான்.
  • Academy விருதுக்கு பல பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டாலும், சிறந்த திரைக்கதைக்காக மட்டுமே பெற்றது சர்ச்சைக்குரியது.
  • தனது முதல் பதிப்பிலியே இத்தகைய சாதனை படைத்த Orson Welles-க்கு அப்பொழுது வயது 25!
Post a Comment

1 comments:

  1. Adiya said...

    இப்போது தான் இந்த பட்ட பத்தி ?பட்டு இருகேன் !!!

    பார்த்துட்டு சொல்லுரன்