My Tweets @bloggerzbible

24 January, 2008

உலக சினிமாவும் நானும்

| | with 4 comments |
தமிழ் சினிமா - எனது 'passion' என்று மட்டும் கூறினால் Mt.Everest-ஐ வெறும் மலை என்று சாதாரனமாக கூறியது போல் ஆகும். சிறு வயது முதல், Theatre-ல் முதல் நாளே நான் பார்த்ததை விட பார்க்காமல் விட்ட படங்ளின் எண்ணிக்கை தான் குறைவு. அதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று, முதல் நாளே பார்ப்பதால் எந்த வித "pre-conceived notion"-உம் இல்லாமல் ஒரு படைப்பாளியின் பதிப்பை நடு நிலைமையோடு காணவும் உணரவும் முடியும். இரண்டு, Theatre-ன் சூழல் தரும் அனுபவமும் ஈர்ப்பும் வீட்டில் TV-யிலொ DVD-யிலொ பார்க்கும் பொழுது கிடைக்க மாட்டா. இது சம்பந்தமாக எனக்கு மிகவும் பிடித்த இன்னொறு விஷயம், திரை படங்களை நண்பர்களுடன் விவாதித்து அலசி ஆராய்ந்து விமர்சனம் செய்வது. முதல் நாளே பார்க்கலைன்னா நாம விமர்சனம் செய்ய முடியாது கேட்க தான் முடியும். (முக்கியமாக, கால் மேல கால் போட்டுக்கிட்டு rhyming-க்காக சொல்லும் சின்ன திரை விமர்சனத்துக்கு முன்னாடியாவது பார்த்திடனும்!!!). இவ்வாறாக தமிழ் சினிமா மோகம் பல ஆண்டுகள் சென்று கொண்டிருக்க, சில மாதங்களுக்கு முன் The Hindu நாளிதழில் வந்த ஒரு advertisement மூலம் பெரிய திருப்பம் நிகழ்ந்தது. அது - நான் ICAF (Indo Cine Appreciation Forum) member ஆக வழி காட்டியாக இருந்தது. அதன் மூலம் பல் வேறு நாட்டின் திரை படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது. கதவை திற சுதந்திரமாக சுவாசிக்கலாம் என்பது போல, தமிழ் சினிமா என்ற ஒரு சிறிய அறையை தாண்டி வெளியெ வர துவக்கமாக இருந்தது. அந்த கால கட்டத்தில் நான் உணர்ந்ததாவது - என் Mt.Everest ஆர்வம் "தமிழ் சினிமா" மீது அல்ல, "சினிமா" மீது என்று!
Post a Comment

4 comments:

  1. Preethi said...

    ungaludaya passionai menmelum neengal thodara enathu manamaarntha vaazhthukkal :-).
    vaazhga vimal, valarga cinema ;-)

  2. Adiya said...

    வணக்கம் ஐயா !!!
    வாங்க எப்படி ஒரு பதிவு போட்டு நாம் விஜய், அஜித் போன்ற
    வெள்ளித்திரை மக்கள் டென்ஷன் பன்னுரிங்க. ம்ம்..

    நல்ல பதிவு !!! ஒரு நல்ல தொடக்கமும் கூட !!!

  3. Adiya said...

    dream factory sounds like ramagopa varam productions. :)

  4. கி.வி said...

    Nandri Mr.Adiya avargalae.
    Naan blog post panrodhoda sari, comments check panradhula konjam (sorry rombavae!) irregular...