My Tweets @bloggerzbible

30 March, 2014

A History of Narrative Film (3rd edition) by David A. Cook: பகுதி 3

| | with 0 comments |

The Former Soviet Union, 1945+

இரண்டாம் உலகப் போருக்கு முன்னரான Soviet Union ன் நிலையை பகுதி 2-ல் கண்டோம். Stalin ன் சர்வாதிகாரம் Soviet Union ன் திரைப்படங்களை முற்றிலும் Socialist Realism என்ற வட்டத்தினுள் முடக்கியது. இது Stalin மறைவிற்கு பின்னரும் நீடித்து திரைத்துறை வளர்ச்சியை மிகுதியாக பாதித்தது. 1960 களில் ஒரு புதிய படைப்பாளிகளின் சந்ததி உதயம் ஆனது. அது பெரும்பாலும் non-Russian நாடுகளான Ukraine, Georgia, Moldavia, Armenia, Lithuania, Kyrgyzstan, Uzbekistan, Turkmenistan  மற்றும் Kazakhstan போன்றவற்றில் வேரூன்றி இருந்தது. இதில் வரலாற்றில் இன்றியமையாத இடத்தை பெற்ற இருவர் - Sergey Paradzhanov (1964; Shadows of Forgotten Ancestors) மற்றும் Andrey Tarkovsky (Andrey Rublev, 1966; Solaris, 1971; Mirror, 1974; Stalker, 1979; Nostalgia, 1983). 1970 களில் Socialist Realism மேலும் ஆட்கொள்ள Soviet  சினிமா மீண்டும் புத்துயிர் பெற்று மலர ஆரம்பித்தது Mikhail Gorbachev ன்  liberlization க்கு பின்னர் தான். Agoniya (1975), Repentance (1978)  போன்ற திரைப்படங்கள் அரசாங்க தடையின்றி வெளிவர ஆரம்பித்தன.

Wind from the east

1930 களில் Japan திரையுலகு  பெரும்பாலும் silent era வாகவே கழிந்தது. இதற்கு முக்கிய காரணம் benshi எனப்படும் நேரடி வர்ணனையாளர் திரையுடன் ஒட்டி விவரித்து வந்தமை தான். மெல்ல மெல்ல recording கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் true sound films உருவாக தொடங்கின. இரண்டாம் உலகப்போர் Japan நாட்டை சின்னாபின்னமாகினாலும் அதன் studio க்கள் தப்பித்தன. இதனால் Japanese திரைப்படங்கள் உருவாகுவதில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை.
அக்காலத் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அதில் தரம் அவ்வளவாக காணப்படவில்லை. இந்நிலையை மாற்றி அமைத்தது jidai-geki (period dramas) என்ற வகையை சார்ந்த திரைப்படங்கள்.அதில் முதன்மையானது Akira Kurosawa-வின்  Rashomon (1950). இத்திரைப்படம் Japan திரை உலகின் மறுமலர்ச்சியை துவக்கி வைத்தது என்று சொன்னால் அது மிகை ஆகாது. Kurosawa தனது சிறந்த படைப்புகளால் (1954; Seven Samurai, 1957; Throne of Blood, 1985; Ran). Mizoguchi Kenji மற்றும் Ozu Yasujiro, Kurosawa அளவு இல்லை என்றாலும் தங்களது தடங்களை வரலாற்றில் பதித்த மற்றவர்களாவர்.
Japan ன் இரண்டாம் தலைமுறை எனக் குறிப்பிடப்படும் வரிசையில் Kobayashi Masaki (1959–61; The Human Condition), Ichikawa Kon (1956; The Burmese Harp) மற்றும்  Shindo Kaneto (1960; The Island). மூன்றாம் தலைமுறையில் தனித்து நின்றவர்கள் - Hiroshi (Woman in the Dunes, 1964), Masumura Yasuzo (The Red Angel, 1965), Imamura Shohei (The Pornographers, 1966), and Oshima Nagisa (In the Realm of the Senses, 1976). இந்தக் காலக்கட்டத்திற்கு பிறகு Japan ன் திரையுலகம் TV மற்றும்  அமெரிக்க விநியோகஸ்தர்களாலும் சற்றே பின்னடைவை காண நேர்ந்தது. 21-ம் நூற்றாண்டின் வருகைக்கு பின்னர் பெரும்பாலும் low-budget படைப்புகளே வெளிவந்தன.

இவ்வளவு நாடுகளைப் பற்றி எழுதிவிட்டு நம் தாய்நாட்டை விட முடியுமா? இந்தியாவை பொருத்த வரை  sound-ன் வரவுதான் திரைத்துறையை முன்னுக்கு கொண்டு வந்தது. அது வரை புராணக்கதைகளை மைய்யமாக வைத்து வந்த திரைப்படங்கள் ஆடல், பாடல் என மக்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இந்திய சினிமாவின் வழிகாட்டியாக திகழ்ந்தவர் -  Satyajit Ray. Apu trilogy-ல் தொடங்கி 1960-70-களில் பல கலை நயமிக்க படைப்புகளை (1960; The Goddess, 1964; The Lonely Wife, 1973; Distant Thunder) Ray உருவாக்கினார். Marxist கொள்கைவாதியான Ritwik Ghatak, Ray அளவிற்கு புகழை அடையவில்லை என்றாலும் புதிய தலைமுறையை ஊக்குவிக்கும் வகையில் சில படைப்புகளை தந்தார். இவர்களுக்கு பின்னர் அரசாங்கத்தின் உதவியால் சினிமாவை முன்னேற்ற உருவான அமைப்புகள் மூலம் பல நல்ல இயக்குனர்கள் இந்திய சினிமாவை வளர்க்க காரணமாக இருந்தனர். பெரும்பாலும் இவர்களின் படைப்புகள் parallel cinema (மும்பை) மற்றும் southern new wave (தென்னிந்தியா) என்ற குடிகளின் கீழ் ஒளிர்ந்தன. 20 ஆம் நூற்றாண்டின் இருதியில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 700 feature film கள் சுமார் 16 மொழிகளில் உள்நாட்டின் பார்வையாளர்களுக்கு என்றே வெளிவந்தன.

China-வின் திரை வரலாறை புரிந்து கொள்ள அந்நாட்டின் அரசியல் வரலாறை (பயப்பட வேண்டாம், அதை விவரிக்கமாட்டேன்!) தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவு ஆதிக்கம். Hundred flowers movement, anti-rightist movement, liberalization, Mao ன் Cultural Revolution என பல அரசியல் சூறாவளிகள் திரைத்துறையை முழுமையாக முன்னேற விடாமல் ஆட்கொண்டன. China வின் திரைத்துரையை 4-5 தலைமுறைகளாக பிரித்துக் பார்க்கலாம். 1- வழிக்காட்டிகள், 2- 1930 களில் socialist realist அடிப்படையில் தயாரித்தவர்கள், 3- கல்வி அறிவு அல்லாத படைப்பாளிகளின் காலம், 4&5 - முறையான திரைக் கல்வி பெற்ற படைப்பாளிகள். Chen Kaige வின் Yellow Earth (1984) தான் உலக அரங்கில் சீனத் திரைத்துறையை பறைசாற்ற வைத்த feature film. Red Sorghum (1988), Code Name 'Cougar' (1989), The story of Qui Ju (1992) - குறிப்பிட்டுக் கூறப்படும் சீன வெளியீடுகளாகும்.

Third World Cinema

அதென்ன Third World? Latin America, Middle East, Africa மற்றும்   Pacific Rim அணைத்தையும் சேர்த்து குறிப்பிடப்படுகிறது. இவற்றில் சில ஒற்றுமைகள் உண்டு. இவை அணைத்தும் பெரும்பாலும் மேற்கு நாடுகளின் ஆதிகத்திலிருந்து விடுபட்டு தங்களுக்கென ஒரு முத்திரையை பதிக்க ஆரம்பித்தது 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான். மற்றொரு முக்கிய விஷயம் - திரைப்படங்களின் தயாரிப்பு அமெரிக்கப் போன்று studio  க்களை சார்ந்து அல்லாமல் independent production-ல் வேரூன்றி இருந்தது.

Latin America

Latin America-வை பொருத்தவரை மூன்று நாடுகள் பிரதானமாக திகழ்ந்தன. Mexico: இதன் திரைத்துறை அமெரிக்காவைப் பின்பற்றி வளர்ந்ததாகும். பெரும்பாலும் commercial நோக்கத்துடனேயே படைப்புகள் வெளிவந்தன. Luis Buñuel தவிர விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தனர். The Forgotten Ones (1950), Torment (1952), Nazarín (1958), Viridiana (1961), The Discreet Charm of the Bourgeoisie (1973) - உலக மேடையில் பேசப்பட்ட படைப்புகளாகும்.

Brazil-ன் திரை வரலாறு பல ஏற்றத் தாழ்வுகளைக் கண்டாலும் Mexico வைக் காட்டிலும் உலக மேடையில் சிறந்து விளங்கியது. ஒரு வருடத்திற்கு 1963-ல் 12 படைப்புகளை மட்டுமே வெளியிட்ட Brazil 1983-ல் 100-க்கு மேற்ப்பட்ட  படைப்புகளை  எட்டி பின்னர் மீண்டும் 1992-ல் 6 என்ற அளவிற்கு குறைந்தது. 1960-80 களில் Brazil திரைப்படங்கள் உலக அளவில் மிளிர முக்கியக் காரணம் Cinema Nuovo அலை தான். இந்த அலை Italy neorealism மற்றும் French new wave-ன் தாக்கத்தால் உருவானது. இதில் பழைய எல்லைகளை தகர்த்து கிராமிய இசையையும் சம்பிரதாயத்தையும் பிரதனாமாக வைத்து படைப்புகள் வெளிவந்தன.  Glauber Rocha இந்த அலையில் முதன்மையானவர். இவ்வகையில் உருவான பல உலக அரங்கில் பெயர் பெற்றன. Black God, White டெவில் - 1964, Land in Anguish- 1967, The Gods and the Dead- 1970, Bye Bye Brazil- 1980: குறிப்பிடத் தக்க சிலவாகும்.

Argentine சினிமா வரலாற்றில் முக்கியமாக திகழ்ந்த ஒன்று 1960-களில் காணப்பட்ட Grupo Cine Liberación movement.  Fernando Solanas, Octavio Getino மற்றும் Gerardo Vallejo இது உருவாக காரணமாக இருந்தவர்கள். "Third cinema" என்ற வகை படைப்புகளை Argentina-கென்றே அடையாளமாக திகழ்வதற்கு இந்த movement-ல் உதித்த படைப்புகளான The hour of the furnaces (1968), El Camino hacia la muerte del viejo Reales (1968), Perón, la revolución justicialista (1971) சிறந்த உதாரணங்கள்.

Africa

1960-க்கு பின்னர் 50-க்கும் மேற்ப்பட்ட Africa நாடுகள் விடுதலைப் பெற்றிருந்தாலும் அவைகளின் திரைத்துறை உலக அளவில் சொற்ப விகிதத்தில் தான் பேசப்பட்டன. North Africa நாடுகளில் Algeria தான் முன்னிலை வகித்தது. Cinema mudjahad (விடுதலை போராளிகளின் சினிமா) மற்றும் cinema djidid (புதிய சினிமா) இயக்கங்களின் மூலம் பல உலகத் தரம் மிகுந்த படைப்புகளை அளித்தது. The wind of Aures; 1966, Mektoub;1970, Chronicle of the years of Emberrs; 1975 - இதில் சில துளிகளாகும். Morocco மற்றும் Egypt இந்த பூகோளத்திலிருந்து பேசுமளவு படைப்புகளை வெளியிட்ட நாடுகள். Sub-saharan Africa நாடுகளின் பங்களிப்பு இன்னும் குறைவு தான். Ousmane Sembene என்ற  தனி ஒருப் படைப்பாளியின் காரணமாக Senegal-ன் படைப்புகள் உலக அளவில் சில தடங்களை பதிக்க முடிந்தது. Black Girl (1966), The Money Order (1968), Emitai (1971), Xala (1974), Cedo (1977) - எல்லாம் இவர் பக்கம் உலக ரசிகர்களின் பார்வையை ஈர்த்தன.

Middle East-ஐ பொருத்த வரை Iran மற்றும் Israel-உம் Pacific Rim-ஐ பொருத்த வரை Thailand, Indonesia, Malaysia, North/ South Korea மற்றும் Philippines-ன் பங்கள்ளிப்பு இன்றியமையாததாக கருதப்படுகிறது. 

யப்பா.. எங்கியாவது இந்த வலைப்பூ முற்று பெற்றாக வேண்டும். அந்த மைல் கல் இதோ வந்துவிட்டது. உலக திரைத்துறையை மேலோட்டமாக அறிந்ததற்கே பெரும் கடலில் நீண்ட தூரம் நீந்தி சென்ற உணர்வு எனக்கு. உலக சினிமா, சிறந்த படைப்புகள் மற்றும் படைப்பாளிகள், நாடுகளின் சரித்திரங்கள், பூகோளம் என புதிதாக கற்றுக் கொண்டவை ஏராளம். இதில் உண்மை என்னவென்றால், இந்த தொடர் வலைப்பூவின் மூலம் நான் சுமார் 30% நூலின் உள்ளடக்கத்தை தான் நன்கு அறிந்து வெளிப்படுதியிருப்பேன் - வாய்ப்புக் கிடைத்தால் மீதிக் கடலை நீந்திப் பாருங்கள்...
Post a Comment

0 comments: