My Tweets @bloggerzbible

17 April, 2008

உலக சினிமா - சில துளிகள்

| | with 6 comments |
  • வெளி நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள சினிமா ஒரு சிறந்த சாதனம். ஒரே நாட்டின் கலாசாரத்தில் வளர்ந்த ஒருவருக்கு வேறு சில நாடுகளில் நடக்கும் அன்றாட காட்சி அமைப்பு கூட வியப்பை தரக் கூடும். இதில் ஒரு நெருக்கடி என்னவென்றால் அந்த நாட்டில் "understood by default" என எடுத்துக் கொள்ளப்படும் விஷயங்கள் நமக்கு புரியாமல் போகும் பட்சத்தில் படைப்பாளியின் உண்மையான நோக்கத்தையே புரிந்து கொள்ளாமல் கடந்து சென்று விடுவோம். In spite of this, a truly world class film can transcend language and country barrier and a lot of movies bear testimonial for that.
  • ஒரு நாட்டின் சில படங்களை கண்டால் மட்டும் போதும், அதிலிருந்து அந்நாட்டின் சினிமா வளர்ச்சி பொருத்து கதைகளின் ஆழம், technology-ன் உபயோகம் , காட்சி அமைப்பின் தேர்ச்சி, மக்களின் ரசனை போன்ற பல அம்சங்கள் மாறுபடுவதை நாம் எளிதில் உணர முடியும்.
  • நண்பர் ஒருவர் "மொழி புரியாமல் subtitle-உடன் பார்ப்பது கஷ்டமாக இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார். உண்மையில் ஒரு படம் எவ்வளவு சுவாரஸ்யம் வாய்ந்தது என்பதை அதுவே சுட்டிக் காட்டிவிடும். திரைக்கதை நம்மை ஈர்த்துவிட்டால் அது dialogue-subtitle வித்தியாசம் இல்லாமல் கடைசி வரை கொண்டு சென்று விடும். இரண்டும் சேராமல் railway track மாதிரி போனால் நம்ம பாடு திண்டாட்டம்தான்!
  • வேற்று நாட்டு திரைப்படங்களில் வரும் கதாப்பாத்திரங்களையும்\நடிகர்களையும் பெரும்பாலும் நமக்கு தெரிந்திருக்காது. அது கூட ஒரு விதத்தில் நல்லதென்றே கூறுவேன். Kollywood என்றால் நடிகரை பொருத்து (இவர் நிச்சயம் நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றி விடுவார், இவர் நிச்சயம் அடுத்து சேற்றில் தான் விழ போகிறார், இவர் நிச்சயம் மொழ நீள definition குடுக்காம போக மாட்டார், இத்யாதி) அடுத்து என்ன நடக்கும் என நமக்கு முன்னரே தெரிந்துவிடும். இதிலே அந்த மாதிரி ஆகிறதுக்கு வாய்ப்பே இல்லை.
  • தேசம் என்ற வட்டத்தை தாண்டும் பொழுது தான், film making at its best என்பதற்கான முழுமையான அர்த்தத்தை உணர முடியும். (அவைகளில் பல இந்த தளத்தில் பதிப்புகளாக இடம் பெற உள்ளன.) முக்கிய காரணம் - மக்களின் ரசனையை பொருத்து படைப்பாளிகளின் படைப்புகளுக்கும் ஒரு எல்லைக்குள் முடக்கப்படுகிறது. மற்றுமோர் காரணம் - ஒரு மனிதனின் சூழலும் அவனது அனுபவமும் திரைக்கதை உருவாவதில் பெறும் பங்கு வகிக்கின்றன. அவ்வாறாக, நாம் எண்ணியே பார்த்திட முடியாத பல கதைகள் ஒரே இடத்திலிருந்து உருவாகும் சாத்தியக் கூறும் அரிது.

    'கனவுத் தொழிற்சாலை'-யை நாடு\மொழி என்ற வட்டத்திற்குள் அடைத்துப் பார்த்தால் இழப்பு என்னமோ வாடிக்கையாளர்களான நமக்கு தான்!
Post a Comment

6 comments:

  1. SathyaPriyan said...

    Excellent write up. Expecting to see more.

  2. prasadh said...

    Nice to read Tamil after a long long time da...Your Tamil is decent da....I like the focus with which you write..Keep it up !!

  3. Preethi said...

    Hey :-),
    nalla cinema can transcend language barrier is very true :-).
    totally agree!
    aprm cinema moolama, oru countryoda kalaacharathai oralavu therinjukalaamkarathukooda , its very true.intha pointa , padicha udaney,i realized, 'Oh aama illa?' :-)

  4. Anonymous said...

    How about "A beautiful Life"?

  5. Anonymous said...

    Puguntha Veetukku ponathukku appuram...update illiye?
    - Sriram

  6. www.bogy.in said...

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in