My Tweets @bloggerzbible

24 October, 2013

Czechoslovakia-வும் சினிமாவும்

| | with 0 comments |

நான் மீண்டும் இந்த வலைப்பூவில் எழுத தொடங்குவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. சில மாதங்களுக்கு முன் 'கனவுத் தொழிற்சாலை'க்குள் நுழைவதற்க்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கூடவே சற்று வித்தியாசமான எண்ணமும் எழுந்தது. எனது பழைய பதிப்பு ஒன்றில்  விஷயம் தான் அது. "வெளி நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள சினிமா ஒரு சிறந்த சாதனம்" இது உன்மைதானா என அறிய முற்பட்டேன்.

எனக்கு கொஞ்சம் கூட பரிச்சையமே இல்லாத நாடான Czechoslovakia-வின் திரைபடங்களை கண்டு அதன் மூலம் எனக்கு தோன்றும் எண்ணங்களைப்  பதிப்பது என முடிவு செய்தேன். அந்த நாட்டின் சிறந்த படங்களில் (Academy Award for Best Foreign Film - nominees) சிலவற்றை கண்டேன். Academy விருது தான் சிறந்த படத்தின் அடையாளமா என்பது சர்ச்சைக்கு உரியது. இப்போதைக்கு அப்படியே வைத்துக் கொள்வோம்.

Czechoslovakia பற்றி ஒன்றும் அறியாமல் திரைப்படங்களை மாத்திரம் கண்டதில் உதித்தவை...

Nazi ஆதிக்கமும் தொடர் political unrest-உம் இந்த நாட்டை எவ்வளவு உலுக்கியிருக்கிறது எண்பதை மிக எளிதில் உணர முடிகிறது. இது ஒரு நாடு மற்றும் Jew சமுதாயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றாலும் அதன் தாக்கத்தை ஒரு சில தனி மனித வாழ்க்கை கதைகள் மூலமாக வெளிப்படுத்தியிருப்பது ஒரு குறிபிடத்தக்க விஷயம்.

The Shop on Main Street (1965), Divided We Fall (2000), Kolya (1996) – இவை எல்லாம் இக் கருத்தை நன்கு வலியுறுத்தும். The Shop on Main Street தான் என்னுடைய favorite.  ஏழைக் கதாநாயகன் German அரசாங்கத்தில் அதிகாரம் மிகுந்த ஒரு உறவினர் மூலம் ஒரு வயோதிக Jewish பெண்மணியின் கடைக்கு “aryan controller”-ஆக நேரிடுகிறது. அப்போது பேராசைக்கும் குற்ற உணர்ச்சிக்கும் நடுவே அவன் மனதில் நடக்கும்  போராட்டத்தை மிக தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பார் director. தன்னுடைய கடையின் உரிமை பறிபோய் விட்டது என்றோ தன்னை விரைவில் மற்ற Jews-உடன் நாடு கடத்தி விடுவார்கள் என்றோ கொஞ்சம் கூட உணர முடியாத அந்த வயோதிக பெண்மணியோடு கதாநாயகன் படும் அவஸ்தையை  அற்புதுமான tragedy கலந்த comedy காட்சி அமைப்புகள் நம்மை மெய் மறக்க செய்து விடும். 
Divided We Fall – சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு மனிதனை எவ்வளவு பலஹினப்படுத்த முடியும் என்பதையும் அச்சமயங்களில் நமது இயல்பு எல்லையிலிருந்து விடுபட்டு செயல்ப்பட்டால் சாதித்து காட்டலாம் என்பதையும் மிக அழகாக சுட்டி காட்டும் கதை. திரையில் வரும் ''You wouldn't believe what abnormal times do to normal people'' என்ற 1-வரி வசனம் தான் இந்த கதையின் பிரதிபலிப்பு. குழந்தை பாக்கியமில்லா ஒரு தம்பதி Jew neighbor-க்கு அடைக்கலம் தர, அதன் மூலம் பல இன்னல்களை சந்திக்க நேரிடுவது, ஒரு கட்டத்தில் தமக்கு குழந்தை பிறக்க போகிறது என பொய் சொல்ல நேரிடுவது, பின்பு அதனை உண்மையாக்க அந்த Jew-வையே சம்மதிக்க வைப்பது, இதற்க்கு நடுவில் அவர்களது குடும்ப நண்பரால் வரும் இடர்கள் என ஒரு high drama-வை காணலாம்.
Kolya பணத்தின் பேரில் ஒரு Russia சந்தர்ப் சூழ்நிலை காரணமாக 50+ வயதான Czech Louka ஒரு 5 வயது Russia பாலகன் Kolya-வின் care-taker-ஆக நேரிடுகிறது. மொழி புரியாமல், குழந்தைப் பற்றி குடும்ப அனுபவமில்லாமல், தனது carefree and womanizing attitude-ஐ விடமுடியாத Louka-விற்கும் Kolya-விற்கும் வளரும் உறவு தான் இந்தக் கதை. கொஞ்சம் “பூவிழி வாசலிலே” சாயல். Louka-வின் மன நிலையை வெளியில் நடக்கும் புரட்சி மற்றும் குழப்பங்களுக்கு ஒப்பிட்டு காணலாம்.

அடுத்ததாக கண்ட Theme – இளமைப் பருவத்தில் வரும் மன குழப்பங்களும் அதன் பேரில் எடுக்கும் முடிவுகளின் விளைவுகளை பற்றியது. The Loves of a Blonde (1965) மற்றும் Closely Watched Trains (1966) இந்த வகையை சேர்ந்தது.
The Firemen's Ball (1967) – என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்திய திரைப்படம் இது. காரணம் - Academy Award விருது வாங்கிய இது சிறந்த comedy-க்கு பெயர் போனதாக குறிப்பிடபட்டிருந்தது. ஆனால் கடைசி வரை எனக்கு ஒரு முறைக் கூட சிரிப்பு வந்ததாக நியாபகம் இல்லை! மேலும் award nominee ஆகும் அளவு இதில் என்ன உள்ளது என்று தெரியவில்லை. திரை படங்களை ரசிக்க மொழி ஒரு தடையாக இருக்குமோ என்று என்னை யோசிக்க வைத்தது என்று கூட சொல்லலாம்.

இந்த அணைத்து Czechoslovakia திரைப்படங்களிலும் புலப்பட்ட மற்றுமொரு விஷயம் கதை எது என்றாலும் அதில் ஒரு element of humor-ஐ (பெரும்பாலும் poignant humor-ஐ) தெள்ளத்தெளிவாக காண முடிந்தது தான்.


ம்ம்..So? வெளி நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள சினிமா ஒரு நல்ல சாதனம் தான் என அறிகிறோம்!!
வலைப்பூ முடிவுக்கு வந்ததா?? அதெப்படி? என்னுடைய பார்வையை தாண்டி கொஞ்சம் facts தெரிஞ்சுக்கனும்னு நினைகிறவங்க மேலே படிங்க.

படித்து அறிந்தவை...

  • Czechoslovakia முதலாம் உலக போர் முடியும் பொழுது 1918-ஆம் ஆண்டு Austria-Hungary பிரிந்ததில் உருவானது. 1938-45 Nazi கட்டுப்பாட்டிலும் 1948-89 Soviet ஆளுமையிலும் வளர்ந்தது. 1993-ல் Czech Republic and Slovakia ஆக பிரிந்தது.
  • 1930-40 களில் wartime கதைகள் மேலோங்கி இருந்தது. 1960 களில் உதித்த Czech New Wave அந்நாட்டின் திரைத் துறையை மாற்ற காரணாமாக இருந்தது. கம்யுனிஸ்ட் ஆட்சியை எதிர்த்து பல இளம் இயக்குனர்கள் அதுவரை தொடாத கருக்களை வைத்து இயக்கினார்கள். புகழ் பெற்ற Milos Foreman இதில் அடங்குவார். வெளி உலகம் இந்நாட்டின் திரைப்படங்களை கவனிக்க தொடங்கியதும் இந்த காலக்கட்டத்தில் தான். 1970 மற்றும் 1980 களில் இந்த அலை ஓய்ந்தது. பின்னர் இப்போதுவரை உள்ள Modern Czech Cinematography மெல்ல வேரூன்ற ஆரம்பித்தது. Jan Svěrák மற்றுமொரு புகழ் பெற்ற இயக்குனர். Milos Foreman-ஐ போல் முறை Academy விருதுகள் வாங்கியுள்ளார்.
  • பெரும்பாலான படங்கள் Czech மொழியில் தான் வெளி வந்தன. அதிகமாக விருதுகள் வாங்கியதும் அவை தான்.
  • 1992 – 2002 கால கட்டத்தில் மொத்தமாக வெளி வந்த Slovak திரைப்படங்களின் எண்ணிக்கை 36 என கூறப்படுகிறது!
  • Krysař (The Pied Piper) என்ற animated Czech திரைப்படம் ஒரே நாளில் படம் பிடிக்கப்பட்டது என Guinness சாதனைப் பெற்றுள்ளது! மற்றொரு சுவாரசியமான விஷயம் 1950 களிலிருந்தே Czech நாடு animated திரைப்படங்களுக்கு பெயர் போனது.
  • உலகப் போர் கால கட்டத்தில் தலைத்தோங்கிய Czech திரைத் துறை தற்பொழுது ஓர் ஆண்டிற்கு வெளியிடும் படங்களின் எண்ணிக்கை 15!


Post a Comment

0 comments: