My Tweets @bloggerzbible

06 September, 2014

0

திரைப்படம் காணும் நம் ஒவ்வொருவரிலும் ஒருவித விமர்சகன் ஒளிந்துள்ளான். இதையே முழுநேரத் தொழிலாக கொண்டவர்கள் சிலரே. அதிலும் சிறந்த விமர்சகருக்கான அங்கீகாரம் பெற்றவர்கள் மிக சிலர். அந்த வகையில் திரைத் துறையின் மாபெரும் விமர்சகர் என புகழ் பெற்றவர் Roger Ebert. இவர் Chicago Sun-Times இதழில் பல ஆண்டுகள் விமர்சகராக பணி புரிந்தவர். கலைத் துறையின் உயர்ந்த விருதான Pulitzer Prize-ஐ முதன் முதலாக film criticism-ற்காக வென்றவர். சமீபத்தில் அவருடைய முக்கிய படைப்பான "Awake in the dark" என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வலைப்பூ அதைப் பற்றியது தான்.
இந்தப் புத்தகத்தில் அவருடைய 40 வருட காலத்தின் விமர்சனங்கள், சிறந்த படைப்புகளின் பட்டியல், பேட்டிகள், விமர்சனத் துறை பற்றிய பார்வை, கட்டுரைகள் மற்றும் தனது அனுபவங்கள் என அணைத்தும் அடக்கம்.


விமர்சனம்

Hollywood திரைப்படங்களின் விமர்சனம் தான் இந்த புத்தகத்தின் பிரதானம். "சிறந்தவை" என்ற தலைப்பில் 1967 முதல் 2005 வரை ஒவ்வொரு வருடத்தின் (அவர் பார்வையில்) சிறந்த திரைப்படத்தின் விமர்சனத்தை வழங்கியுள்ளார்.  Bonnie and Clyde-ல் துவங்கி Nashville, Cries and Whispers, The Color Purple, Schindler's List, God Father, Good Fellas என The Crash வரை பட்டியல் செல்கிறது. இந்தப் பகுதிக்காக தான் நான் இந்தப் புத்தகத்தையே வாங்கினேன். ஆனால் உண்மையில் மற்ற பகுதிகள் போல் என்னை இது ஈர்க்கவில்லை. தனிப்பட்ட முறையில் விமர்சனங்களில் திரைப்படத்தை தாண்டி நிறைய நான் எதிர்ப்பார்த்ததால் அப்படி இருக்கலாம். ஆனால் ஒரு பத்திரிகைக்காக பல்வேறு தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் கோணத்தில் பார்த்தால் அந்த குறை மறைந்து விடும். 40+ ஆண்டுகள் ஒரே பத்திரிக்கைக்கு எழுதுவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று. ஒரு ரசிகனின் உணர்வுகளையும் மனித வாழ்க்கையின் சம்பந்தத்தையும் மிக எதார்த்தமாக அவரது விமர்சனங்கள் வெளிப்படுத்தியிருப்பதை நாம் எளிதாக காணலாம்.. 
ஒரு சில documentaries மற்றும் foreign films-ம் தனி பகுதிகளாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இவற்றை "சிறந்தவை" என்றல்லாமல் "சிறந்தவற்றில் சில தேர்வுகள்" என குறிப்பிட்டுள்ளார்! Satyajit Ray-வின் The Music Room (1999) இதில் ஒன்று. 
 

கட்டுரைகள் (think pieces)

இந்தப் புத்தகத்திலியே என்னை மிகவும் கவர்ந்த பகுதி இது தான். இந்த பகுதியில் வெளி வந்த ஒவ்வொன்றும் திரை உலகின் ஏதாவது ஒரு அடிப்படை கருத்தை புதிய கோணத்தில் சிந்திக்க வைப்பனவாக இருக்கும். அதில் நிச்சயமாக படிக்க வேண்டியவை இரண்டு.
 
"The case for an 'A' rating" (1990): அமெரிக்க திரைப்பட துறையில் அந்த காலக் கட்டத்தில் இருந்த சான்றிதழ்கள் - G, PG, PG-13, R மற்றும் அங்கீகாரமில்லாத  X. Roger Ebert-ன் பிரச்னையே இந்த R மற்றும் X-ற்கு நடுவில் ஒன்றும் இல்லாதது தான்.  இதற்கு லாப நோக்கம் கொண்ட தியேட்டர் உரிமையாளர்களும் ஒரு காரணம். Sexual content (X-rating) வகையறாவை சேராத பெரியவர்கள் மட்டும் பார்க்கும் ரகத்தை சேர்ந்த பல நல்ல திரைப்படங்கள் (The Cook, the Thief, Her Lover, His Wife) நடுவில் தத்தளித்தன. R ரகம் இல்லாதனால் X எனச் சொல்லலாமா? சிந்திக்க வேண்டிய ஒன்று. இன்று NC-17 சான்றிதழ் வந்து விட்டது. 

"A pulitzer for movies" (1997): Tony, Emmy, Oscar, Grammy, National Book Awards என பல பிரசித்திப் பெற்ற விருதுகள் அந்தந்த துறையை சார்ந்த குழுவின் மூலமாக தேர்ந்தெடுத்து வழங்கப் படுகிறது. ஆனால் pulitzer விருது ஒரு தனிப்பட்ட வல்லுநர்க் குழுவால் கலைத்துறை மற்றும் ஊடக பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இதில் திரைப்படங்களுக்கு இடம் இல்லை. Roger Ebert-ன் வாதம் Oscars மற்றும் இதர விருதுகளில் box office hit, மக்கள் ஆதரவு மற்றும் உணர்ச்சிப்பாங்கு - இவைகளின் ஆதிக்கம் நிறைய காணப்படுகிறது. இதிலிருந்து விடுபட்டு நடுநாயகமான தேர்வு pulitzer மூலமாக கிடைக்கும் என நம்பினார். நல்ல சிந்தனை. புத்தகம், நாடகம், இசை, பத்திரிக்கையியல் போன்றவைகளில் ஒரு தனி மனிதனின் படைப்பு அதிகம் மாறாமல் அப்படியே நம்மை வந்தடைகிறது. சினிமா அப்படி இல்லை. இயக்குனரின் பங்கு அந்த மாதிரி என்றாலும் மற்ற பல விஷயங்கள் (இசை, தொகுப்பு, இத்யாதி) ஒரு குழுவின் படைப்பாக நம்மை வந்தடைகிறது. இதனால் கூட pulitzer விருது சினிமாவிற்கு பொருந்தாமல் விட்டிருக்கலாம் என எண்ணுகிறார். 
இந்த மாதிரி இன்னும் சில கட்டுரைகள்.

பேட்டிகள் 

இந்த பகுதியை படித்தால் நமக்கு பொறாமையாக இருக்கும். திரைப்படத் துறையில் இவர் காலக் கட்டத்தில் வாழ்ந்த வரலாற்று புகழ் பெற்ற முக்கால்வாசி கலைங்கர்களுடன் பழகி பேட்டி காணும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்திருக்கிறது. Ingmar Bergman, Martin Scorsese, Warren Beatty, Steven Speilberg, Lee Marvin என நீண்ட பட்டியல். பொதுவாக விமர்சனமும் பேட்டியும் இரு துருவங்கள் மாதிரி. ஆனால் Chicago Sun-Times-ல் எல்லாமே இவர் தான். ஒரு பேட்டியாளன் நடுத்தரமான விமர்சனத்தை கொடுப்பது கடினமான ஒன்று என இவரே குறிப்பிட்டுள்ளார். இதை தாண்டி இறக்கும்வரை தன் தொழிலை கச்சிதமாக செய்தார் என்பதுதான் உண்மை.

திரை விமர்சனம் பற்றி

இந்த பகுதியில் அவருடைய விருப்பு வெறுப்புகளை விவரித்திருப்பார். தனக்கு பிடித்த genre (movement, suspense, hero-வாக நல்லவர்கள் மட்டுமல்லாமல் தீயவர்களும் வருவன போன்றவை), கலைங்கர்கள் (Martin Scorsese,Altman,Coppola), சில திரைப்படங்கள் மற்றும் அதில் தனித்து நின்ற காட்சிகள் (Casablanca, Singin' in the rain, The third man) என எடுத்துக் காட்டியிருப்பார். Silent மற்றும் black and white திரைப்படங்கள் மீது உள்ள ஈர்ப்பை வெளிப்படுத்தியிருப்பார். Home video-க்கள் மூலம் ரசிகர்கள் இழந்த theatre அனுபவத்தையும் சுட்டிக் காட்டி இருப்பார். (சற்று சலிப்புடன்) விமர்சகர்களை பார்த்து கேட்கப்படும் முக்கிய கேள்விகளாக மூன்றை விவரித்திருப்பார்: ஒரு நாளைக்கு சுமார் எத்தனை படங்கள் காண்பீர்கள்? ஒரே படத்தை எத்தனை தடவை காண்பீர்கள்? விமர்சனம் செய்யும் திரைப்படத்தை உண்மையில் கண்டீர்களா? மேலும் இவற்றுக்கு என்ன பதில் கூறினாலும் நம்புவார்களென  ஒரு வித கேலியுடன் எழுதியிருப்பார்.

ஒரு சிறு ஞாபகக் குறிப்பு

படையென வெளி வரும் திரைப்படங்களுக்கு மத்தியில் நல்லவற்றை அடையாளம் காட்டி அதை காணுவதால் என்ன எதிர்பார்க்கலாம் என சரியாக எடுத்துரைக்கும் பொறுப்பு தானுட்ப்பட  எந்த ஒரு நல்ல விமர்சகனுக்கும் உள்ளது என்ற கருத்தோடு இந்த கடைசி பகுதியின் மூலம் இந்த புத்தகத்தை முடிக்கிறார்.

சராசரி ரசிகனைக் காட்டிலும் ஒரு விமர்சகன் (திரையரங்கின்) இருட்டில் முழிப்போடு இருக்க வேண்டும் என்பதை "Awake in the Dark" மூலம் எடுத்துரைத்திருக்கிறார். திரைப்படத்தை விரும்புகிறவர்கள் முக்கியமாக விமர்சகனாக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

30 June, 2014

0
தமிழ் வலைப்பூ என்றாலும் இதுவரை ஏனோ ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பற்றி கூட எழுதவில்லை. சமீபத்தில் கண்ட யாமிருக்க பயமே  ஒரு சில வரிகளை எழுத தூண்டியது.

இந்த திரைப்படம் என்னைக் கவர்ந்ததற்கு சில காரணங்கள் உண்டு. பொதுவாக நல்ல action, love genre-களைக் காட்டிலும் horror திரைப்படங்கள் எடுப்பது சற்று கடினம். Comedy-யும் அதே போல் கஷ்டமான ஒன்று. Horror + comedy பற்றி சொல்லவே வேண்டாம். அந்த வகையில் ஒரு நல்ல திரைப்படத்தை எழுதி இயக்கிய Deekay-வை பாராட்டியே ஆக வேண்டும். இத்தனைக்கும் இது அவருக்கு முதல் முயற்சி என்று அறியும் பொழுது இந்த மாதிரி கலைங்கர்களையும் திரைப்படங்களையும் ஊக்குவிக்கும் பொறுப்பு ரசிகர்களான நமக்கு உள்ளது. நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட நடிகர் நடிகையோ, பெரிய budget-  விளம்பரமோ இல்லாமல் ஒரு தரமான திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதற்கு யாமிருக்க பயமே  ஒரு எடுத்துக்காட்டு.

கதை: கிரண்-ற்கு (கிருஷ்ணா) தனது தந்தையின் சொத்தான ஒரு மலைப்பிரதேச பங்களா இருப்பது தெரிய வருகிறது. தனது காதலியுடன் (ரூபா) சேர்ந்து அதை ஒரு hill resort-ஆக நடத்த திட்டமிடுகின்றார். அவர்களுடன் manager-ஆக சரத்தும் (கருணாகரன்) அவர் சகோதரி சரண்யா (ஓவியா) சமையர்காரியாகவும் இணைகின்றனர். துவங்கிய நாள் முதலே அங்கு வரும் விருந்தினர்கள் மர்மமான முறையில் இருந்து போகின்றனர். அதற்கான ஒரு flash-back மூலம் நமக்கு தெரிய வருகிறது. அதன் பின்னர் கிரணிற்கு மேலும் ஆபத்து காத்திருப்பது தெரிய வருகிறது. அதை சமாளித்தாரா இல்லையா என்பது தான் மீதிக் கதை

முதல் கால் மணி நேரம் சற்று தொய்வுடன் காணப்பட்டாலும் அதன் பின்னர் சூடு பிடிக்கும் திரைக் கதை கடைசி வரை நம் கவனத்தை சிதறடிக்காமல் கட்டி செல்கிறது. Climax வரை அந்த mix of horror and comedy பக்க பலமாக அமைந்திருக்கிறது.

Flash-back sequence கொஞ்சம் வாரணம் ஆயிரம்  படத்தை நினைவூட்டினாலும் அதை வேண்டும் என்கிற அளவிற்கு சிறியதாகவும் நுணுக்கமாகவும் சித்தரித்திருப்பது நல்ல யுக்தி. மேலும், S N Prasad-ன் music score எந்த இடத்திலும் நமது ஆர்வம் சோடை போகாமல் பார்த்துக் கொள்கிறது. ஆனால் தமிழ் சினிமாவின் விதிப்படி எண்ணிக்கையை தொட வேண்டும் என்று நான்கு பாட்டுகள் தேவையா என யோசித்திருக்கலாம். நாயகனின் சற்று தொய்வான நடிப்பு, எளிதில் யூகிக்கக்கூடிய காட்சியமைப்புகள் மற்றும் சில இரட்டை அர்த்த வசனங்களை கழித்துவிட்டு பார்த்தால் ஒரு நல்ல time-pass நமக்கு guarantee.

யாமிருக்க பயமே  மாதிரி முயற்சிகள் தான் தமிழ் சினிமா இன்னும் வளரும் கலைங்கர்களின் கையில் உள்ளது என்ற உணர்வை ஏற்ப்படுத்துகிறது.

26 June, 2014

0

சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த prison escape திரைப்படங்களில், கால வரிசையின் படி முதல் மற்றும் கடைசி all-time greats-ஆக கருதப்பட்ட La Grande Illusion (1937) மற்றும் Shawshank Redemption (1994) தான் இந்த வலைப்பூவின் மையம்.

இவற்றுக்கிடையே ஒற்றுமைகள் உண்டா? கண்டிப்பாக.
இரண்டின் கதையும் திரைக்கதைக்கு முன்னர் புத்தகங்களாக (The Great Illusion மற்றும் Rita Hayworth and Shawshank Redemption) உருவானவை. இரண்டுமே தயாரிக்கப்பட்ட காலக் கட்டத்திற்கு பல வருடங்கள் முன்னர் திரைக்கதை நடப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டிலுமே முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களை கொண்ட இரு கைதிகளிடையே மலரும் நட்பு big day of escape-ற்கு வழிவகிக்கிறது. இரண்டிலுமே அசத்தாலான prison-break strategy-யை தாண்டி human relationship பற்றிய ஒரு ஆழ்ந்த கருவையும் காண முடியும். அதனால் தான் இவை all-time hit-ஆக ரசிகர் மனதில் இடம் பெற்றுள்ளன. இந்த ஒற்றுமைகளைத் தாண்டி இரண்டுமே தனக்கென ஒரு அடையாளத்தை கொண்ட வித்தியாசமான திரைப்படங்கள்.

La Grande Illusion

Jean Renoir-ன் இயக்கத்தில் வெளிவந்த French திரைப்படம். German camp-ல் சிக்கிக்கொள்ளும் French கைதிகளைப் பற்றிய கதை இது. ஒரு typical prison-break கதையில் என்னவெல்லாம் எதிர்ப்பார்போமோ அது எதுவும் இதில் இருக்காது! மாறாக - மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படும் கைதிகளையும், பல முறை தப்பிக்க முயன்றவர்களையும் மன்னித்து சராசரி கைதிகளுடன் மீண்டும் சேர்த்து விடுவது, கைதிகளுக்கு ஊரிலிருந்து வரும் parcel-களை அப்படியே தருவது என காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு முக்கிய காரணம் La Grande Illusion நடக்கும் காலம் 1914. அப்பொழுது நடந்த முதலாம் உலக போர் war of gentlemen என கருதப்பட்டது. 
பிரெஞ்சு aristrocrat-class-ஐ சார்ந்த Captain de Boeldieu மற்றும் working-class-ஐ சார்ந்த  Maréchal-ம் Von Rauffenstein தலைமையில் உள்ள German camp-ற்கு அனுப்பபடுகிறார்கள். அவர்களுடன் Rosenthal என்ற Jewish கைதி இணைகிறார். தன்னைப் போன்றே de Boeldieu aristrocrat class- ஐ சார்ந்தவர் என்பதால் Von Rauffenstein தனி மதிப்பும் நட்பும் பாராட்டுகிறார். Prison escape நாளன்று திட்டமிட்டபடி de Boeldieu German காவலர்களை திசைத் திருப்ப, Rosenthal-ம் Maréchal-ம் தப்பி செல்கிறார்கள். தொடர்ந்து தப்பி செல்லும் வழியில், Maréchal-க்கும் ஒரு German விதவைக்கும் இடையே சிறிய காதல் கதை மலர்வது போல் கதை அமைக்கப்பட்டிருக்கும். இறுதியில் Swiss border-ஐ தொட்டமையால் German வீரர்கள் Rosenthal-ஐயும் Maréchal-ஐயும் விட்டு விடுகிறார்கள். சுபம். 

இந்த எளிய திரைக்கதைக்கு பின்னால் Renoir அவரது trademark style-ல் பல ஆழ்ந்த கருத்துக்களை உணர்த்தியிருப்பதை நாம் காண முடியும். de Boeldieu மற்றும் Von Rauffenstein-ன் சித்தரிப்பின் மூலம் போர் நிமித்தம் பெருமை கொள்ளும் aristrocratic class-ஐ காணலாம். Rosenthal மற்றும்  Maréchal-ன் சித்தரிப்பின் மூலம் போரை வெறுக்கும் working class-ஐ காணலாம். German விதவையுடன் மலரும் Maréchal-ன் காதல் மூலமும், German காவலர்கள் French கைதிகளை நடத்தும் விதம் மூலமும் நாடு என்ற எல்லை தாண்டி இருக்கக் கூடிய human relationship-ஐ காணலாம்.
France-ல் முதல் உலகப் போரை "the last of all" என்று குறிப்பிடுவது உண்டு. அதை படத்தின் title 'Illusion' என சுட்டிக்காட்டுகிறது. உண்மையில், 'Illusion' என்ன என்பது நம் பார்வைக்கு உட்பட்டது. அது - போர் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் என்பதாக இருக்கலாம். மனித உறவு எல்லைகளுக்கு உட்பட்டது என்பதாக இருக்கலாம். சமுதாயத்தில் வர்கத்தின் முத்திரைகள் மாறாது என்பதாக இருக்கலாம்.

என் பார்வையில், மிக நல்ல படம் என்றாலும் கதையின் broader treatment-ஆல் என்றென்றும் மனதில் நிற்குமா என தெரியவில்லை.

The Shawshank Redemption

Frank Darabont இயக்கிய ஆங்கில திரைப்படம். ஒரு prison escape திரைப்படத்தில் என்னவெல்லாம் எதிர்ப்பார்க்கலாமோ அவ்வளவும் அதற்கும் மேலும் இதில் காணலாம்.  

கதை: ஒரு திறமைசாலியான வங்கி ஊழியர் Andy Dufresne (Tim Robbins) சூழ்நிலைக் காரணமாக கொலையாளி என முத்திரையிடப்பட்டு shawshank சிறைக்கு ஆயுள் கைதியாக வர நேரிடுகிறது. பின்னர் நிரபராதி என தெரிய வந்தாலும், தங்களின் சுயநலத்திற்காக சிறை அதிகாரிகள் சூழ்ச்சி செய்து Andy விடுதலையாகும் வாய்ப்பை புதைக்கின்றனர். அதன் பின்னர் நீங்கள் யூகிக்க கூடியது தான். சராசரி கதை தான். ஆனால் treatment of the story தான் இதை master piece-ஆக கொண்டு செல்கிறது. 
Andy தான் hero என்றாலும் கதை முழுதும் அவனுடன் சக கைதியாகவும் நண்பனாகவும் விளங்கும் Red-ன் (Morgan Freeman) பார்வையில் தொகுத்து வழங்கப்படுகிறது. Freeman-ன் style of narration நம் மீது அபரிதமான impact-ஐ உருவாக்குகிறது. Robbins- விட அவருக்கு பல விருதுகளின் nomination கிடைத்தது. ஒரு frame கூட சலிக்காத வகையில் 30 வருட காலத்தின் கதையை மிக நேர்த்தியாக நிதானமாக கொண்டு சென்றிருப்பார் இயக்குனர். சொல்லப்போனால் conscious-ஆக slow pace-ல் திரைக்கதை அமைக்க துணிவு வேண்டும். மொத்தத்தில் நாமும் கதையுடன் ஒன்றி Andy-யுடன் சிறையிலியே உள்ளது போல் உணர்வோம். அது தான் இந்த படத்தின் மிகப் பெரிய வெற்றி. மேலும் ஆழமான வசனங்கள் கதையை தாண்டி நம் வாழ்க்கையில் எப்பொழுதாவது inspiration வேண்டியிருந்தால் இதில் பலவற்றை நினைவு கூறலாம். 

அதில் சில:
“Remember Red, hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies.”

“Get busy living, or get busy dying.”

“Andy Dufresne: ... there are places in this world that aren't made out of stone. That there's something inside... that they can't get to, that they can't touch. That's yours.
Red: What're you talking about?
Andy Dufresne: Hope.”

அப்படியென்றால் குறையே சொல்ல முடியாதா? ஹூம் அப்படியில்லை. சொல்லப்போனால், Andy தப்பி செல்லும் tunnel logic-ல் extra large ஓட்டை உள்ளது. 25 வருடங்களுக்கு மேலாக ஒரு கைதிக்கு ஒரே அறையை தருவார்களா? அப்படியே வைத்துக்கொண்டாலும் அதை வெள்ளையடித்து சுத்தம் செய்ய மாட்டார்களா? அது இல்ல matter. இதை நீங்கள் உணரும் பொழுது திரைப்படம் முடிந்து பல மணி நேரமோ ஏன் பல நாட்கள் கூட ஆகியிருக்கலாம். அவ்வளவு ஒன்றி விடுவோம் - அது தான் படத்தின் வெற்றிக்கு அடையாளம்.

சில துளிகள்:
  • La Grande Illusion தான் முதன் முதலில் Academy Award-க்கான Best Foreign Film-ற்காக நியமனம் செய்யப்பட்ட திரைப்படம்.
  • La Grande Illusion முற்றிலுமாக Nazi காலத்தில் அழிக்கப்பட்டது என Renoir உட்பட அணைவரும் எண்ணி இருந்தனர். உண்மையில் ஒரு German film archivist மூலம் original negative இருப்பதை 30 வருடம் கழித்து கண்டுப்பிடித்தனர்.
  • Box office-ல் படு சுமாராக ஓடிய Shawshank Redemtption dvd rental-ல் தனி சரித்திரமே படைத்தது.
  • Shawshank Redemtption 7 Academy Award- க்கு நியமனம் செய்யப்பட்டது. ஆனால் அதில் ஒரு விருது கூட  பெறவில்லை.