My Tweets @bloggerzbible

02 December, 2013

ஓட்டப் பந்தயத்தில் மூன்றாவதாக வந்தால் வெற்றி!!

| | with 0 comments |
அதென்ன மூன்றாவதாக வந்தால் வெற்றி எனத் தோன்றுகிறதா? 1998-ல் Majid Majidi-ன் இயக்கத்தில் வெளி வந்த Children of Heaven தான் இதற்கு பதில். இப்படத்தை காணும் ஒவ்வொருவரின் இதயமும் அந்த Climax ஓட்டப் பந்தயத்தில் எப்படியாவது Ali (கதையின் முக்கியப் பாத்திரம்) மூன்றாவது இடத்தை பெற வேண்டும் என கண்டிப்பாக துடி துடிக்கும். இதை உண்மையில் திரையில் காணும் பொழுது தான் முற்றிலும் உணர முடியும். Children of Heaven தேசம் மற்றும் மொழி வேறுபாடின்றி குழந்தைகள் (அவர்கள் பெற்றோர்களும் தான்!) காண வேண்டிய திரைப்படம்.

அண்ணன், தங்கை, காலணிகள் (a pair of shoes) – இவ்வளவு தான் இந்த கதை! 9 வயது Ali அவனது தங்கை Zahra-வின் ஒரே காலணிகளை தொலைக்க நேரிடுகிறது. வீட்டு வாடகைக் கூட தர முடியாத ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த அவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் இதை தற்காலிகமாக சமாளிக்க முற்படுகின்றனர்.  இருவருக்கும் பள்ளி நேரம் வேறு வேறு என்பதால் Ali-யின் காலணிகளையே மாற்றி மாற்றி உபயோக படுத்துகிறார்கள். அதனால் Ali பள்ளிக்கு தாமதாக செல்வது, Zahra காலணிகள் பெரிதாக இருபதனால் பள்ளியில் அவதிக்கு உள்ளாவது என பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.  ஒரு புறம் காலணிகளை தேடி கண்டுபிடிக்கும் முயற்சிகள் அத்துணையும் தோல்வியில் முடிவடைகிறது. மறு புறம் தந்தையின் வேலை நிலைமை மேலும் மோசம் அடைய அவரிடம் காலனி விஷயத்தைக் கூறுவது முற்றிலும் சாத்தியமற்றதாக விளங்குகிறது. இத்தருணத்தில் தான் பள்ளிகளுக்கு இடையே நடை பெறும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு Ali-க்கு கிடைக்கிறது. அதில் மூன்றாவதாக வருபவருக்கு புத்தம் புதிய காலணிகள்! முடிவென்னவோ நீங்கள் நினைப்பது அல்ல. ஹும்...

 பரிசுத்தமான குழந்தைகளின் உலகத்தை அவர்கள் கண்கள் வாயிலாகவே காண்பதை போல தத்ரூபமாக காட்சி அமைத்திருக்கும் இயக்குனருக்கு பல சபாஷ்-கள் போடலாம். மற்றொரு சபாஷ் விஷயம் -  Iran-ன் கலாச்சாரத்தையும் சராசரி வாழ்க்கை நிலையையும் அவ்வளவு நேர்த்தியாக பல காட்சி அமைப்புகளில் வெளிபடுதியிருப்பது.  ஆடம்பரம், நட்சத்திர கூட்டணி, அழுத்தமான கரு போன்ற அணைத்தையும் தாண்டி உயிரூட்டமான  திரைவடிவமைப்பின் மூலம் ஒரு திரைப்படத்தை மக்களிடம் சென்றடைய வைக்க முடியும் என்பதற்கு இது ஒரு மிக சிறந்த உதாரணம்.

மேலும் சில துளிகள்...
துளி 1: Iran-ல் பெருபாலும் உபயோகப்படுதபடும் Persian மொழியை வலமிருந்து இடம் எழுதுவது முறை என இப்படம் மூலம் அறிந்தேன்!
துளி 2: Children of Heaven தான் Academy nominee ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் Iran திரைப்படம். ஆனால் One of the all-time hit-ஆன Italy திரைப்படம் Life is beautiful அந்த ஆண்டு விருதை தட்டிச் சென்றது.
துளி 3: Majid Majidi-ன் Color of Paradise இந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றாலும் அதுவும் ஒரு miss பண்ணக் கூடாத சிறந்த படைப்பு. கண் தெரியாத ஒரு சிறுவனின் உலகம் பற்றியது. Baran மற்றும் The Song of Sparrows இவரின் முக்கியமான படைப்புகளில் அடங்கும் மேலும் சில. 
Post a Comment

0 comments: