My Tweets @bloggerzbible

30 April, 2014

ஆங்கில எழுத்தாளர், பிரெஞ்சு இயக்குனர், இந்தியப் பின்னணி திரைக்கதை

| | with 0 comments |


பொதுவாக ஒவ்வொரு பதிவின் முடிவில் சில துளிகளை (trivia) பகிர்வது என் வழக்கம். ஆனால் இந்த வித்திசியாமான துளிகள் தான் என்னை இந்த திரைப்படத்தை பார்க்க வைத்தமையால் அதை முதலிலேயே பகிர்ந்துகொள்கிறேன்.  உங்களுக்கும் அது சுவாரஸ்யமான செய்தியாக இருக்கும் என நினைக்கின்றேன்.
  • Rumer Godden என்ற ஆங்கில எழுத்தாளர் இந்தியாவின் கங்கைக் கரையின் பின்னணியைக் கொண்டு எழுதிய கதை - The River.
  • இந்தக் கதையின் யதார்த்தமும் இந்தியப் பின்னணியும் உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு இயக்குனர் Jean Renoir-ன் மனதை வெகுவாக கவர, இதை திரைப்படமாக்கும் எண்ணத்துடன் இக்கதையின் உரிமையைப் பெற்றார்.
  • இப்படத்தை தயாரிக்க யாரும் முன் வராத நிலையில், சினிமா தயாரிக்கும் ஆசை கொண்ட Kenneth McEldowney-டம் யதேச்சையாக ஒரு விமானப் பயணத்தில் Nehru-வின் சகோதரியிடம் உரையாட நேரிட்டது. அப்பொழுது இந்தியாவைப் பற்றி வெளிநாட்டவர் எழுதிய ஒரு சிறந்த புத்தகமாக The River-ஐ பரிந்துரை செய்தார். அது தான் 1951-ல் The River (French: Le Fleuve) என்ற பிரெஞ்சு திரைப்படம் உருவாக பிள்ளையார் சுழியாக இருந்தது.
  • இது Renoir-ன் முதல் color படம் மட்டும் அல்ல இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் technicolor படமும் கூட.
  • இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர் Satyajit Ray-விற்கு Renoir-ன் நட்பும் சினிமா பற்றி எண்ணங்களை பரிமாறவும் வித்தாக இருந்தது இந்த படம் எனக் கூறலாம்.
  • Hollywood-ன் தலை சிறந்த இயக்குனர் Martin Scorsese இந்தப் படத்தை தனது one of the all-time favorite ஆக குறிப்பிட்டுள்ளார்.

இப்பொழுது திரைக்கதைக்கு வருவோம்! மேலோட்டமாக பார்த்தால் கங்கைக் கரையின் பின்னணியில் நடக்கும் ஒரு நாற்கோண (quadrangular!) காதல் உறவைப் பற்றிய திரைக்கதை.
Melanie with her father, Image via trailer screenshot (United Artists)
இந்தியாவில் வசித்து வரும் ஒரு ஆங்கிலேய குடும்பத்தை சேர்ந்த குமரி Hariet. இவரின் பார்வையில் தான் முழுக் கதையும் உரைக்கப்படுகிறது. சுமார் அழகு கொண்ட Hariet, அழகான துரு துரு Valerie (அண்டை வீட்டு அமெரிக்க குமரி), சாத்வீகமான Melanie (Eur-asia குமரி) மற்றும் Captain John (ஒரு கால் இழந்த போர் வீரன்) என ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட சித்தரிப்புகள்.   அந்த நால்வரின் மன நிலையையும் குழப்பங்களையும் பார்வையாளர்களுக்கு மிக எளிமையாக விளக்கியிருப்பது தான் The River-ன் பலமே. இந்த உறவுகளின் போராட்டத்தைத் தாண்டி கங்கைக் கரையின் ஓரம் உள்ள சமூகத்தின் சித்தரிப்பின் மூலம் இந்திய சடங்குகளையும், பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பார் Renoir.
உண்மையில் 'The River' என்ற தலைப்பை உருவக (metaphor) சொல்லாக பாவிக்கலாம். இளமைப்பருவத்தைச் சார்ந்த காதல் குழப்பம், போரின் ஆழ்ந்த வடு, இளம் சிறுவனின் மரணம், கலாசாரத்திர்கிடையேயான  குழப்பம் என existential questions-ஐ நம் முன் எழுப்பி, "நீ நதி போல ஓடிக் கொண்டே இரு" என்ற மாதிரியான விடையையும் Renoir தருகிறார். (சுமார் 6-7 வயதே ஆன) சகோதரனின் ஈமச்சடங்கு முடிந்த பின்னர் Hariet-உம் குடும்பத்தினரும் சாப்பிட அமர்ந்துள்ளனர். அப்பொழுது பேசப்படும் இரு வரி dialogue இதை வெகுவாக வலியுறுத்தும்.
Hariet: So we move on as if nothing happened?
Hariet's mother: We move on. (அழுகை)
தொடர்ந்து செல்லும் மனித வாழ்க்கையை சுட்டிக் காட்டும் வண்ணம் நதியை ஒரு தலைமுறையை அதன் அடுத்த தலைமுறையுடன் இணைக்கும் பாலமாக கதை முற்று பெறுகிறது.

நமக்கு பரிச்சயமே அல்லாத வேற்று நாட்டின் பின்னணியை தைரியமாக தேர்நதேடுத்ததில்லாமல் அதை பிசரில்லாமல் visual treat-ஆக அளித்திருக்கும் Renoir-க்கு ஒரு பெரிய சலாம். என்னுடைய பதிவு உலக சினிமா - சில துளிகள் ஒன்றில் "தேசம் என்ற வட்டத்தை தாண்டும் பொழுது தான், film making at its best என்பதற்கான முழுமையான அர்த்தத்தை உணர முடியும்." என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த மாதிரி படைப்புகள் அதற்கு நல்ல உதாரணம்.
Post a Comment

0 comments: