My Tweets @bloggerzbible

31 May, 2014

புபனேஸ்வரும் குறிக்கோளும்: பகுதி 2

| | with 0 comments |

முதல் பகுதியில் இருந்த ஓட்டத்திற்கு, காலம் எங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தந்து விட்டது என்று சொன்னால் நன்றாகத் தானிருக்கும்.  அது சொன்னது என்னவோ ரொம்ப simple விஷயம். Training முடிந்து இறுதி தேர்விற்கு இன்னும் ஒரு நாள் தான்  பாக்கி என்பது தான். புபனேஸ்வர் வந்த குறிக்கோள் நிறைவேறும் நாள் நெருங்கி விட்டது. ஹும்.

Cut. இந்த இடத்தில் தொடர்வதற்கு முன் ஒரு flashback ஓட்டியாக வேண்டும்.
அந்த 4 மாத காலத்தில் கணக்கில்லா திரைப்படங்களை கண்டிருந்தாலும் Kaante ஒரு positive special-ன்னு சொல்லலாம். சில திரைப்படங்கள் நம்மை பார்வையாளர்கள் என்ற எல்லையை தாண்டி கதாப்பாத்திரமாகவே பாவிக்க வைக்கும். அது தான் சினிமாவின் தாக்கம். ஒரு எளிய உதாரணம். மின்னலே வெளிவந்த போது mechanical engineering படித்த முக்கால்வாசி மாணவர்களுக்கு "This guy’s on some fire, Object of desire, Oho, Maddy, Maddy, oh oh Maddy" அப்படின்னு ஒரு bgm நடைமுறை வாழ்க்கையிலும் அவங்களுக்குள் கொஞ்ச நாள் ஓடிக்கிட்டு இருந்திருக்கும். 
எங்களுக்கு Kaante. கதை சுருக்கம்: முற்றிலும் மாறுபட்ட பின்னணி கொண்ட 6 பேரை (Amitabh, Sanjay Dutt, Mahesh Manjrekar, Lucky Ali, Sunil Shetty, Kumar Gaurav) காலம் சந்திக்க வைக்கின்றது. தங்களது எல்லாப் பிரச்சனைக்களுக்கும் தீர்வு - கொள்ளையடிப்பது தான் என முடிவு செய்து இணைந்து திட்டமிடுகிறார்கள். அதில் வெற்றியா? தோல்வியா? என்பது தான் முடிவு
Kaante by Pritish Nandy Communications/ CC BY-SA 3.0

Hollywood follow பன்றவங்களுக்கு Reservoir Dogs- இந்தக் கதை நினைவு படுத்தியிருக்கலாம். கதையை விடுங்க. படத்தின் supreme aura, bgm, songs முக்கியமா build-up - இதெல்லாம் தான் weight. இப்போ எப்படின்னு தெரியல ஆனா அப்போ எங்களை ரொம்ப பாதிச்சது. படம் super எல்லாம் கிடையாது. ஆனால் எங்களுடைய அந்த period-க்கு ரொம்ப ஏத்த மாதிரி இருந்தது. கொஞ்ச நாள் அதன் பாட்டு, வசனம், mannerism இதெல்லாம் எங்க கிட்டயும் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் எங்க group- ஒருத்தன் style-ஆன நடையை பார்த்துவிட்டு batchmate 'உனக்கெல்லாம் மனசுல என்னதான் நினைப்பு?'-ன்னு கேட்டே விட்டான்னா பார்த்துக்கோங்களேன்! வேற ஒன்னும் இல்ல bgm song 'Collar ko thoda sa upar chadake, Cigratte ke dhuaa ka challa bana ke...' தான் காரணம்.

Cut மறுபடியும் தேர்விற்கு முதல் நாள்.
ஆறு பேரும் கையில் ஒரு புத்தகத்தோடு. நடுவில கொஞ்சம் doubts, நிறைய நாட்டு நடப்பு discussion. ஒரு நல்லவன் latest release-ஆன Jism பற்றி ஆரம்பித்தான். பேச்சு வார்த்தை வளர்ந்தது. John Abraham மற்றும் Bipasha Baasu ஜோடி at their peak. தேர்வு முடிந்த இரவே அணைவருக்கும் train. எல்லோர் கண்களிலும் ஒரு அரை முடிவு. போதுமே - அடுத்த பத்து நிமிடங்களில் theatre வாசலில்! அங்கே 'house full' போர்டு பார்த்திட்டு அடச்சே இப்படியாச்சேன்னு யோசிச்சிகிட்டு ஒரு வளம் வந்தோம். நம்ம நாட்டிலேதான் இந்த மாதிரி மக்களுக்கு உதவுவதற்கென்றே இருப்பாங்களே. அந்த ஊருக்கு நாங்க கொடுத்த விலை கொஞ்சம் ஜாஸ்த்தி தான். பரவாயில்லை - சினிமாத் துறையுடன் அந்த ஊரும் வளரட்டும். உள்ளே சென்றால், எங்க seating A1, A2, ..., A6. சில் காற்று. நறுமணம். மீண்டும் அந்த வெளி நபருக்கு மனதிற்குள் நன்றி செலுத்திவிட்டு திரைப்படத்தில் மூழ்கினோம்
Hype அளவு இல்லை என்றாலும் ஓரளவு satisfied. முக்கியமாக எங்களுக்குள் இருந்த mental block விலகி விட்டது. எங்க குறிக்கோள் நிறைவேறியது. புபனேஸ்வர் வந்த குறிக்கோள் தான் பாக்கி.

D-day. தேர்வு முடிந்து, பட்டியல் வெளியானது. ஒரே சீராக ஓடிக்கொண்டிருந்த எண்களின் ஓட்டத்திற்கு சட்டென்று எங்கோ முட்டியது போல் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒருவர் மட்டும் தேர்வு பெறவில்லை. அன்று இரவு வீட்டில் ஒரு இனம் தெரியாத அமைதி.  வேண்டா வெறுப்பாக மீதி ஐவரும் தத்தம் posting location-க்கு புறப்பட்டோம். ரயில்ப பயணம் முழுதும் Jism போயிருக்க கூடாதோ, over chillax-ஆ இருந்துட்டோமோ அப்படின்னு எண்ண அலைகள் நிம்மதியை கெடுத்தன. இவ்வளவு நாள் வாழ்க்கையிலே கஷ்டப்பட்டு வந்து miss ஆனா காலத்திற்கும் அந்த வலி மறக்காதே அப்படின்னு எங்களுக்குள் கலக்கம். 4 மாதங்களில் அந்த மாதிரி உணர்வு ஏற்பட்டதே இல்லை.
இந்த group-க்கு sentiment செட் ஆகாதுன்னு ஆண்டவன் நினைத்தாரோ என்னமோ அந்த திருப்பம் வெறும் anti-climax ஆக மட்டுமே இருந்தது. சில தினங்களில் நடந்த மறுதேர்வில் தேர்ச்சி பெற்று எங்களுடன் posting location-ல் இணைந்தான். ஷப்பா. அந்த சில தினங்களின் மன உளைச்சலில் நாங்கள் உணர்ந்தது - எங்களது கூட்டு வெறும் clique அல்ல thick friendship என்று... salute புபனேஸ்வருக்கு.

Post a Comment

0 comments: